ஆற்றல்களைச் சமர்ப்பித்தல்
இந்தச் சூட்சுமம், ஒப்புயர்வற்ற இயற்கை, தெய்வம் அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு (குரு, இஷ்ட தெய்வம் அல்லது ரிஷிகள்) அன்பு, மரியாதை மற்றும் நன்றியுணர்வுடன் ஆற்றல்களைச் சமர்ப்பிக்க ஒரு எளிய வழியாகும். மேலும், இயற்கையின் கூறுகளான நெருப்பு, காற்று, நீர், நிலம் மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் இதே வரிசையில் ஆற்றல்களைச் சமர்ப்பிக்கலாம்.
நோக்கம்
ஒப்புயர்வற்றது என நாம் கருதும் தெய்வங்களுக்கும், இயற்கைக்கும் நமது வணக்கங்களைச் சமர்ப்பித்தல்.
சம்பிரதாயங்கள் எதுவும் இன்றி மனதார நம் அன்பையும், வணக்கத்தையும் சமர்ப்பித்தல்.
செயல்முறை
சுத்தமான இடத்தில் அமருங்கள். அந்த இடத்தை ஆற்றல்களால் தூய்மைப்படுத்துங்கள்.
உங்கள் கைகளில் 3 அடி ஒளிப்பந்தை வைத்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அன்பு, மரியாதை மற்றும் நன்றியுணர்வுடன், இந்த ஒளிப்பந்தை பொன்னிற ஆற்றல்களால் நிரப்புங்கள் (உங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்).
இயற்கை அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு இந்த ஒளிப்பந்தை மனதளவில் சமர்ப்பியுங்கள்.
யார்
யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.
எங்கே
உட்புறங்களில் அல்லது திறந்தவெளியிலும் பயிற்சி செய்யலாம்.
எப்பொழுது
ஒரு நாளின் எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம். மேலும், நாம் கோயில்களுக்கோ அல்லது வழிபாட்டுத் தலங்களுக்கோ செல்லும்பொழுது, அங்கே உள்ள தெய்வத்திற்கு ஆற்றல்களைச் சமர்ப்பிக்கலாம்.
காலம்
குறைந்தபட்சம் 5 நிமிடங்கள்.
பலன்கள்
தெய்வாம்சம் பொருந்தியவர்களின் நல்லாசிகளையும், வழிகாட்டுதலையும் பெற உதவுகிறது.
இயற்கை அல்லது இயற்கையின் கூறுகளிலிருந்து (பஞ்ச பூதங்களிடமிருந்து) பாதுகாப்பு பெற உதவுகிறது.
இயற்கை மற்றும் தெய்வத்துடன் நல்லிணக்கம், ஒருமைப்பாடு மற்றும் சுமுகமான உறவை ஏற்படுத்த உதவுகிறது.
நமது உள்ளுணர்வையும், விழிப்புணர்வையும் மேம்படுத்த உதவுகிறது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...