சத்ஞான யோக சாதனை
பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ், "சத்ஞான யோக சாதனை" (SYS) என்னும் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் சூக்ஷ்ம வியாயாமம், சூரிய நமஸ்காரம், குறிப்பிட்ட யோகாசனங்கள், பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சித் திட்டம் பிரத்தியேகமாகப் பணியிடங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் நடத்தப்படுகிறது, இப்பயிற்சித் திட்டம், அங்குப் பணிபுரிவோரின் படைப்பாற்றல், உடல்நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் செயல்திறன் அதிகரிக்க உதவுவதோடு, உகந்த குழு இயக்கவியலை அடையவும் உதவுகிறது. உங்கள் பணியிடத்தில் SYS பயிற்சியை மேற்கொள்ள, எங்கள் அலுவலக உதவி மையத்தை, கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் (WhatsApp) நம்பர் மூலமாகத் தொடர்பு கொள்ளவும் அல்லது contact@brahmarishishermitage.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
அண்மைய நிகழ்வுகள்
-
ஜூன் 21, 2024
சர்வதேச யோகா தினத்தையொட்டி, பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) வளாகத்தில், எங்கள் தன்னார்வத் தொண்டர்கள் சத்ஞான யோக சாதனை (SYS) பயிற்சியளித்தனர், இதில் சுமார் 130 மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். குருதேவர் தேவாத்மானந்தா ஷம்பலா அவர்கள் கலந்துகொண்டு தியானப் பயிற்சியை நடத்தினார், மேலும் அவர், இதில் பங்கேற்றோர்க்கு ஆன்மிக வழிகாட்டுதலையும் வழங்கினார்.
-
ஜூன் 10 - 14, 2024
பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ், பெங்களூரு ஐஎஸ்ஐடிஇ (ISITE) வளாகத்தில் URSC, ISRO ஊழியர்களுக்குச் சத்ஞான யோக சாதனை (SYS) பயிற்சியளித்தது.
-
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...