அறக்கட்டளை
பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ் (Brahmarishis Hermitage) என்பது ஒர் இலாப நோக்கற்ற, ஆன்மிக அமைப்பாகும்.
‘ஆன்மிகச் சாதனையின் மூலம் ஆத்ம ஞானம் அடைதல்’ மற்றும் ‘மனிதக்குலத்திற்குச் சேவை புரிதல்' ஆகியவை எங்கள் பாதையின் முதன்மை நோக்கங்கள் ஆகும். ரிஷிகள் மற்றும் சித்தர்கள் கற்பித்தபடி தியானம் மற்றும் ஆன்மிக ஞானத்தை அனைத்து ஆர்வமுள்ள ஆன்மிக ஆர்வலர்களுக்கும் கற்பிப்பதை இந்தப் பாதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பாதையின் ஒப்புயர்வற்ற நோக்கமானது தெய்வீக அன்பு, ஐக்கியத்தன்மை முதலியவற்றை எடுத்துரைத்து, மனிதக்குலத்தைச் சத்ய யுகம், ஷம்பலா போன்ற புதிய யுகத்தின் நிதர்சனங்களை நோக்கி வழிநடத்திச் செல்வதாகும்.
சப்தரிஷிகளும், 18 சித்தர்களும் எங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகள் ஆவர்.
சப்தரிஷிகள் மற்றும் சித்தர்களின் வழிகாட்டுதலை ஏற்று, 2014 ஆம் ஆண்டு, எங்கள் குரு ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா அவர்களால் பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா அவர்கள், ஆன்மிக வளர்ச்சி மற்றும் தன்மாற்றத்தை அளிக்கும் ஆன்மிக நுட்பங்களைச் சாதகர்களுக்குக் கற்பித்து, அவர்களை வழிநடத்துகிறார்.
பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ் அமைப்பானது, ஒவ்வொருவரும் தெய்வாம்சம் பொருந்தியவர் என்ற நித்திய உண்மையில் வலுவாக வேரூன்றியுள்ளது. தியானம் மற்றும் நேர்மயமாக்குதலின் வாயிலாக ஒவ்வொருவருள்ளும் இருக்கும் இந்தத் தெய்வீக அம்சத்துடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதின் மூலம், நம் வாழ்வின் உண்மையான நோக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை அடைவது சாத்தியமாகும்.
பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ் அமைப்பானது, ஒவ்வொருவரும் தெய்வாம்சம் பொருந்தியவர் என்ற நித்திய உண்மையில் வலுவாக வேரூன்றியுள்ளது. தியானம் மற்றும் நேர்மயமாக்குதலின் வாயிலாக ஒவ்வொருவருள்ளும் இருக்கும் இந்தத் தெய்வீக அம்சத்துடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதின் மூலம், நம் வாழ்வின் உண்மையான நோக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை அடைவது சாத்தியமாகும். எங்கள் குருவின் வழிகாட்டுதலுடன் இந்த நவீன உலகில் தங்கள் ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ளவும், தன்மாற்றத்தை அடையவும் ஆர்வமுள்ள அனைவருக்கும் இப்பாதையின் கதவுகள் திறந்தே உள்ளன.
அருட்பணி
தற்போது, எங்கள் குரு ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆன்மிகச் சாதனை செய்பவர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.
பிராணாயாமம், தியானம், மேம்பட்ட தியானப் பயிற்சிகள், கிரியைகள், யோகாசனங்கள், நேர்மயமாக்கும் வழிமுறைகள் மற்றும் ஆன்மிக நுட்பங்கள் போன்றவை ஆன்மிக ஆர்வலர்களின் முழுமையான நல்வாழ்வுக்காகக் கற்பிக்கப்படுகின்றன. வாராந்திர சத்சங்கங்கள் (இணையத்தில் அனைவரும் ஒன்றிணைந்து, குழுவாகத் தியானித்தல், அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்குக் கேள்வி-பதில் நேரம்), அவ்வப்பொழுது ஆன்மிகக் கூட்டங்கள் மற்றும் ஆற்றல் மிகுந்த திருத்தலங்களுக்கு ஆன்மிக யாத்திரைகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளவும், மற்றவர்களைக் குணப்படுத்தவும் தேவையான நுட்பங்கள் கற்பிக்கப்படுகின்றன.
ஆன்மிகச் சாதகர்களின் நலனுக்காக "ஆன்மிக ஞானம்" என்ற செய்திமடல் இரு மாதத்திற்கு ஒருமுறை பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ் குழுவால் வெளியிடப்படுகிறது. இந்தச் செய்திமடல், எங்கள் குருவின் போதனைகளின் மையக்கருத்தையும், ரிஷிகள் அருளும் அரிய ஞானத்தையும் உள்ளடக்கிய முழுமையான பிரசுரமாகும்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...