ஏகாதசி விரதம்
மனித உடல் உணவு, நீர், பிராண சக்தி மற்றும் அண்டவெளியிலிருந்து தனக்கு தேவையான ஆற்றலைப் பெறுகிறது. நம் அறியாமையினால் உணவு மற்றும் நீரை மட்டுமே ஆற்றலின் மூலமாகக் கருதி அண்டத்திலிருந்து வரும் நுண்ணிய ஆன்மிக ஆற்றல்களைக் கிரகித்துக்கொள்ளத் தவறுகிறோம்.
ஏகாதசி போன்ற விசேஷமான நாட்களில் நாம் விரதம் இருப்பதால் இந்தத் தூய்மையான ஆற்றல்களைப் பெறுகிறோம். வயிறு காலியாக இருக்கும்போது பிராணாயாமம், தியானம் முதலிய ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதும் உண்மை.
ஒவ்வொரு மாதம் பௌர்ணமி மற்றும் அமாவாசையிலிருந்து பதினோராவது நாள் ஏகாதசி ஆகும். இவ்வகையில் ஒரு மாததிற்கு ஏகாதசி திதி இருமுறை வருகிறது. மிகவும் விஷேசமான நாளான ஏகாதசி, விரதத்திற்கு உகந்த நாளாகும்.
மனித உடல் உணவு, நீர், பிராண சக்தி மற்றும் அண்டவெளியிலிருந்து தனக்கு தேவையான ஆற்றலைப் பெறுகிறது. நம் அறியாமையினால் உணவு மற்றும் நீரை மட்டுமே ஆற்றலின் மூலமாகக் கருதி அண்டத்திலிருந்து வரும் நுண்ணிய ஆன்மிக ஆற்றல்களைக் கிரகித்துக்கொள்ளத் தவறுகிறோம். ஏகாதசி போன்ற விசேஷமான நாட்களில் நாம் விரதம் இருப்பதால் இந்தத் தூய்மையான ஆற்றல்களைப் பெறுகிறோம். வயிறு காலியாக இருக்கும்போது பிராணாயாமம், தியானம் முதலிய ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதும் உண்மை.
நோக்கம்
உடலில் உள்ள நச்சுகளை நீக்குதல், மனதை தூய்மைப்படுத்துதல் மற்றும் பஞ்சகோஷங்களை பலப்படுத்துதல்.
செயல்முறை
எட்டு முதல் எண்பது வயது வரையுள்ள எவர் வேண்டுமானாலும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். தானியங்கள், பருப்பு வகைகள், அசைவ உணவுகள், மாசடைந்த உணவுகள் முதலியவைகளை தவிர்த்தல் நலம். நீரும் பருகாமல் படிப்படியாக அன்றைய முழு நாளும் உண்ணாமல் இருக்கும் நிலையை அடைய முடியும். படிப்படியாக ஒருவர் எதுவும் உண்ணாமல், நீர் கூடப் பருகாமல் முழு உண்ணாவிரதத்தை கடைபிடிக்கும் நிலையை அடைய முடியும். அவரவர் விருப்பப்படி தன்னை வருத்திக்கொள்ளாமல் உண்ணாமல் இருக்க முயலலாம்.ஆயினும் உடல் நலம் குன்றியவர்கள், கர்பிணிப்பெண்கள் உண்ணாமல் ஏகாதசி விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
பயிற்சி குறிப்புகள்
ஏகாதசி நாளில் உண்ணாவிரதத்துடன் மௌன விரதத்தையும் மேற்கொள்ளுதல் நன்மை பயக்கும்.
ஏகாதசி உபவாசத்தின் பொழுது "ஓம்கார தியானத்தை" செய்யலாம். இது உடல் மற்றும் மனதின் ஆற்றலைப் பராமரிக்க உதவுகிறது. இது நாள் முழுவதும் இறைவனுடன் இணைந்திருக்க உதவுகிறது.
எட்டு முதல் எண்பது வயது வரையுள்ள எவர் வேண்டுமானாலும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். தானியங்கள், பருப்பு வகைகள், அசைவ உணவுகள், மாசடைந்த உணவுகள் முதலியவைகளை தவிர்த்தல் நலம். நீரும் பருகாமல் படிப்படியாக அன்றைய முழு நாளும் உண்ணாமல் இருக்கும் நிலையை அடைய முடியும். படிப்படியாக ஒருவர் எதுவும் உண்ணாமல், நீர் கூடப் பருகாமல் முழு உண்ணாவிரதத்தை கடைபிடிக்கும் நிலையை அடைய முடியும். அவரவர் விருப்பப்படி தன்னை வருத்திக்கொள்ளாமல் உண்ணாமல் இருக்க முயலலாம்.ஆயினும் உடல் நலம் குன்றியவர்கள், கர்பிணிப்பெண்கள் உண்ணாமல் ஏகாதசி விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
பலன்கள்
வழக்கமான ஏகாதசி விரதம் நமக்கு, பின்வரும் உடல், மன மற்றும் ஆன்மிக பலன்களைத் தருகிறது.
உடலை முழுமையாகச் சீர்செய்து புத்துணர்ச்சியடையச் தருகிறது.
உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
மனவுறுதி மற்றும் அகவலிமையை அதிகரிக்கிறது.
தேவையற்ற எண்ணங்களைக் களைய உதவுகிறது.
உறக்கம் தொடர்பான கோளாறுகளைச் சீர்செய்கிறது.
மனதை அமைதிபடுத்தவும், தெளிவுபடுத்தவும் உதவுகிறது.
காமம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
நமது ஆன்மிக சாதனைக்கு உத்வேகம் அளிப்பதோடு விரைவில் ஆத்மஞானம் அடையவும் உதவுகிறது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...