இறைப்பேரொளி
◘ இறைப்பேரொளியே படைப்பின் ஆதாரமாகும். இறைப்பேரொளியின் தளம் பரபிரம்ம லோகம் என்று அழைக்கப்படுகிறது.
◘இறைப்பேரொளியில் இருந்து கோடானுகோடி விண்மீன் திரள்கள், பல்வேறு உலகங்கள் மற்றும் பலவிதமான உயிரினங்கள் தோன்றின.
◘ இறைப்பேரொளியானது எதிர்பார்ப்பில்லாத அன்பு, கருணை, பேரமைதி, பேரானந்தம், பேரறிவு, புனிதத்தன்மை, பேராற்றல், உயிர் சக்தி மற்றும் பலவற்றை உள்ளடக்கியது.
◘ இறைப்பேரொளி சர்வ வல்லமை பொருந்தியது, எங்கும் எதிலும் வியாபித்திருப்பது மற்றும் அனைத்தும் அறிந்த பேரறிவாகும்.
◘இறைப்பேரொளி மாற்றங்களுக்கும், காலத்திற்கும் அப்பாற்பட்ட மெய் நிலையாகும்.
◘நாம் ஜீவாத்மாவாகப் பிறப்பெடுப்பதற்கு முன்னர் இறையொளியோடு ஐக்கியமாக இருந்தோம். எனவே, நாம் இறையொளியிலிருந்தே தோன்றினோம்.
◘இறையொளி நுண்ணிய அலைவரிசையில் இருப்பதால் இந்த நில உலகில் நமது புறக் கண்களால் காண இயலாது. இருப்பினும், ஆழ்ந்த தியானத்தில் அதை உணரவும், காணவும் முடியும்.
◘இறைப்பேரொளி குணமளிக்கிறது.
◘இறைப்பேரொளி கடவுளாகும்.
ஆன்மா
◘ஆன்மா என்பது ஆதியந்தமற்ற இறைவனின் அம்சமாகும்.
◘ஆன்மா இறையொளியின் தளத்திலிருந்து வந்த ஒளித்துகளாகும். எனவே ஆன்மா அன்பு, அமைதி, உள்ளத்தூய்மை முதலிய பேரொளியின் அனைத்து அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.
◘இப்படைப்பின் அனுபவங்களைப் பெறுவதே ஆன்மாவின் லட்சியமாகும்.
◘ஆன்மாவானது நமது மார்பு பகுதியின் மத்தியில் ஆனந்தமய கோஷத்தில் உறைகிறது.
◘இப்படைப்பின் அனுபவங்களைப் பெற ஆன்மாவுக்கு உடலின் துணை தேவைப்படுகிறது. எனவே உடல் ஆன்மாவைத் தாங்கி நிற்கிறது.
◘ஆன்மா மரணத்தைக் கடந்து, உடல் அழிவுற்ற பின்னரும் நிலைத்திருக்கிறது.
◘ஆன்மாவின் பயணம் அதன் ஆதிமூலமான இறைப்பேரொளியைத் திரும்பச் சென்றடையும் பொழுது முடிவுறுகிறது.
◘மனசாட்சி என்பது ஆன்மாவின் குரலாகும்.
◘நாம் ஆன்மாக்கள்.
குரு
◘குரு என்பவர் ஆத்மஞானியாவார். நாம் இறைப்பேரொளியை மீண்டும் சென்றடையும் பயணத்தின் மார்கதரிசி ஆவார்.
◘குரு என்பவர் அனைத்து ஆன்மிக மெய்நிலைகளையும் அறிந்துணர்ந்தவர். அஞ்ஞானம் எனும் இருளை நீக்குபவர்.
◘குரு என்பவர் தர்மத்தை எடுத்துரைத்து அதன் பாதையில் நம்மை அழைத்துச் செல்பவர்.
◘குருவானவர் தீட்சை அளித்து, நமது ஆன்மிக சாதனை முழுமை அடைந்து, பரிபூரணனாய் தனித்துச் செயல்படத் துவங்கும் வரை துணை நிற்கிறார்.
◘குருவானவர் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்பவர். மேலும் அவர் எவர்மீதும் எதையும் திணிப்பதில்லை.
◘குரு என்பவர் உத்வேகம், ஊக்கம் மற்றும் வலிமையின் நிலையான ஆதாரமாவார்.
◘குருவே இறைப்பேரொளியை அடையும் எளிய மார்கமாவார்.
◘தீட்சை பெற்று ஆன்மிகப் பயணத்தைத் துவங்கத் தயாராக உள்ள ஆன்மிக ஆர்வலர் முன், தக்க தருணத்தில் குருவானவர் தோன்றுகிறார்.
◘குரு இறைப்பேரொளியின் வடிவமாவார்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...