
கல்கி பகவான்

புராணங்களின்படி, பகவான் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி பகவான், கலியுகத்தின் முடிவில் நமது பூமியில் உள்ள அதர்மத்தை முற்றிலுமாக அழித்து, சனாதன தர்மத்தை நிலை நாட்ட அவதரிப்பார். உண்மையில், பகவான் ஏற்கனவே அவதரித்து விட்டார்!
கல்கி பகவான், 1924 ஆம் ஆண்டுக் கண்களுக்குப் புலப்படாத, ஆன்மிக ரகசியங்கள் நிறைந்த ஷம்பலா என்றழைக்கப்படும் ஆரியவர்த்தப் பள்ளத்தாக்கில் பிறந்தார். அவர் இப்பொழுது இருபதுகளில் இருக்கிறார். ஏனெனில், அவருடைய அகவை முறை நம்மிலிருந்து வேறுபட்டது. கல்கி பகவானுக்குப் பகவான் பரசுராமரும், மகரிஷி அஸ்வத்தாமாவும் தெய்வீக சக்திகள் வாய்ந்த கருவிகள் குறித்தும், பகவான் ஆஞ்சநேயர் 64 சித்திகளையும், வசிஷ்ட மகரிஷி வேத நூல்கள் மற்றும் குணநலன்களையும், விஸ்வாமித்திர மகரிஷி திவ்ய அஸ்திரங்கள் மற்றும் பிரபஞ்ச சக்திகளைக் கையாளும் முறைகளையும், மார்க்கண்டேய மகரிஷி மனிதகுலத்தைக் கையாளும் அம்சங்களையும் பயிற்றுவித்தனர். அவர் ஷம்பலாவிலிருந்து முக்கிய மைத்திரேயர்களில் ஒருவராகச் செயல்படுகிறார். அவர் ஒற்றைக்கொம்பும், சிறகுகளும் கொண்ட மின்னல் வேகத்தில் பயணிக்கும் ஓர் வெள்ளைக் குதிரையை வாகனமாகக் கொண்டுள்ளார். விசேஷமான சந்தர்ப்பங்களில் மாத்திரமே தனது வாகனத்தைப் பயன்படுத்துகிறார். சிவபெருமானிடம் பரிசாகப் பெற்ற விளிம்பில் மாணிக்கம் பதித்த ஊடொளி ஸ்தம்பத்தைக் (Laser stamba) கையில் ஏந்திய கல்கி பகவான் எதிர்மறை ஆற்றல்களை அழிக்க அதைப் பயன்படுத்துகிறார்.
பகவான் கல்கி "கல்கி திட்டம்" என்னும் முன்மாதிரியைப் படைத்துள்ளார். பல ரிஷிகளும், தெய்வாம்சம் பொருந்தியவர்களும் அமைதியாக இத்திட்டத்தில் அவரின் கீழ் பணியாற்றுகின்றனர். பல மதங்களைச் சார்ந்த தலைவர்களும் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவரின் தலைமையில் நிலையான தர்மத்தின் மார்க்கம் மற்றும் ஒரே நிலையான மதமும் நிறுவப்படும். அதர்மத்தின் வழியில் அதிகாரத்துடனும், அரசனைப் போன்று செல்வ செழுமையுடனும் வாழும் பலரும் வெகு விரைவில் மறைவர்.
கல்கி பகவானின் பணிகள்

கல்கி பகவான் சக்திவாய்ந்த ஒளிப் பணியாளர்களின் பெரிய படையைக் கொண்டிருக்கிறார். பகவான் பரசுராமர், பகவான் கல்கிக்குப் படைத் தளபதியாக உதவுகிறார். பகவான் கல்கியின் சகோதரரான சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் கொண்ட மகா-அவதாரமும் அவரின் பணிகளுக்குத் துணை நிற்கிறார். ஷம்பலாவின் மற்ற மைத்திரேயர்களும் அவருடைய லட்சியத்திற்கு உதவுகிறார்கள். நமது பூமியில் எந்த முக்கியமான நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், பகவான் கல்கி சப்தரிஷிகள் மற்றும் அவருடன் இருக்கும் முக்கியஸ்தர்களுடன் ஆலோசிப்பார்.
பகவான் கல்கியுடன் பணிபுரிவதோ, அவருடைய படையில் சேர்வதென்பதோ எளிதன்று. ஒருவர் தர்மத்தின் மார்க்கத்தைத் தேர்வு செய்வதோடு மட்டுமல்லாமல் அதனைச் சுவீகரித்து அதன்படி நடத்தல் அவசியம். பகவான், ஒளியின் அஸ்திரங்களைத் தீமையின் வேர்களை அழிக்கப் பலமுறை பிரயோகித்துள்ளார். தன்னுடைய சீர்திருத்தும் பணியினைச் சிறிய அளவில் தொடங்கியுள்ளார்.
கல்கி திட்டம்

பகவான் கல்கி "கல்கி திட்டம்" என்னும் முன்மாதிரியைப் படைத்துள்ளார். பல ரிஷிகளும், தெய்வாம்சம் பொருந்தியவர்களும் அமைதியாக இத்திட்டத்தில் அவரின் கீழ் பணியாற்றுகின்றனர். பல மதங்களைச் சார்ந்த தலைவர்களும் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவரின் தலைமையில் நிலையான தர்மத்தின் மார்க்கம் மற்றும் ஒரே நிலையான மதமும் நிறுவப்படும். அதர்மத்தின் வழியில் அதிகாரத்துடனும், அரசனைப் போன்று செல்வ செழுமையுடனும் வாழும் பலரும் வெகு விரைவில் மறைவர்.
பகவான் கல்கியுடன் பணிபுரிபவர்கள், பல்வேறு நாடுகளில் தகுதி வாய்ந்த மற்றும் சிறந்த மனிதர்கள் உயர் பதவிகளை ஏற்கவும், பொருளாதார ரீதியில் வலிமையாகவும், தர்மத்தின் பாதையில் முன்னேறவும் உதவுகிறார்கள். மார்க்கண்டேய மகரிஷி மற்றும் விஸ்வாமித்திர மகரிஷி ஐரோப்பியக் கண்டத்திலும், ஷம்பலாவிலிருந்து பகவான் மைத்திரேயா, பகவான் பரசுராமர் மற்றும் மகரிஷி அஸ்வத்தாமா மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களிலும், வசிஷ்ட மகரிஷி, மகா-அவதார், பகவான் ஆஞ்சநேயர் மற்றும் பகவான் கல்கி ஆகியோர் ஆசிய மற்றும் அமெரிக்கக் கண்டங்களிலும் பணிபுரிகின்றனர்.
மகத்துவம் மிக்க தெய்வாம்சம் பொருந்திய இவர்கள் அனைவரும் இவ்வகிலத்தில் பழைய கட்டமைப்பு முறைகளை மாற்றிப் புதிய கட்டமைப்புகளை நிறுவ ஓய்வின்றித் தொடர்ந்து உழைக்கின்றனர். உலகெங்கும் படிப்படியாகப் பொருளாதார மாற்றம் மட்டுமல்லாமல் கல்வி மற்றும் அரசியல் அமைப்புகளிலும் கூட மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. வெகு விரைவில் தற்போது உள்ள மருத்துவ முறைகளும் தகர்ந்து புதிய குணமாக்கும் முறைகளும், மாற்று மருத்துவ முறைகளும் அறிமுகப்படுத்தப்படும்.
அடிப்படை உபதேசங்கள்

எப்பொழுதும் உண்மையாகவும், முழு விழிப்புணர்வுடனும் இருங்கள். உங்களை நேசியுங்கள்.
எப்பொழுதும் உங்களிலிருந்து பிரபஞ்ச சக்தியானது உயிரோட்டத்துடன் பிரவாகிப்பதால் உங்கள் எண்ணம், செயல் மற்றும் உணர்வுகளில் நேர்த்தன்மையுடன் இருங்கள். நீங்கள் முழு விழிப்புணர்வுடன் இருந்தால் நேர்மயமாக்குதல் தீவிரமாகும்.
ஆணவம், அச்சம், கோபம், பொறாமை, பற்று, பேராசை, காமம் மற்றும் ஆசை முதலிய எதிர்மறைக் குணங்களைக் களையுங்கள். இக்குணங்களுடன் இருத்தல் உங்களையே அழித்துவிடும்.
பற்றின்மையையும், பணிவையும் வளர்த்துக்கொள்ளுங்கள். அன்பு, சத்தியம், நன்றியுணர்வு, பொறுமை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை நடைமுறைப்படுத்துங்கள். ஆனந்தத்தில் திளைத்திருங்கள்.
மன்னியுங்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் யாரென்று எண்ணியிருந்தீர்களோ அதுவாக இல்லாமல், எப்பொழுதும் யாராக இருக்கிறீர்களோ அதுவாக மாறுங்கள்.
உங்கள் வாழ்வின் லட்சியம் ஆத்ம ஞானம் அடைதலாகும்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...