அண்மைய நிகழ்வுகள் | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

அண்மைய நிகழ்வுகள்


  • ஜூலை 21, 2024

    குரு பௌர்ணமி விழா

    குரு பூர்ணிமா, நமது குரு மற்றும் குரு பரம்பரைக்கு நம் அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்தும் நாள், அபரிமிதமான அருளாசிகளை நல்கும் நன்னாள். ரிஷிகளின் வாக்குப்படி, இறைப்பேரொளியின் சாராம்சமான குருத் தத்துவம், ஸ்ருஷ்டி வெளிப்படாத சுத்த வெளிலிருந்து வருகிறது. இதன் சாரத்தை ஒரு சிலரே பெறுகிறார்கள். அதிர்ஷ்டசாலிகளான இந்த ஒரு சிலர், உலகில் ஆன்மிக விழிப்புணர்வை உயர்த்தும் இறைத்தூதுவர்கள் ஆகிறார்கள். இந்தப் புனிதமான குரு பூர்ணிமா நன்னாளில், இறைத் தூதுவர்களாகிய நமது குருநாதர்களைப் போற்றிக் கௌரவித்துக் கொண்டாடுகிறோம்.

    பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜின் ஆன்மிகச் சாதகர்கள், குரு பூர்ணிமா நன்னாளை அளவுகடந்த அன்பு, நன்றியுணர்வு மற்றும் பக்தியுடன் கொண்டாடினர். குருதேவர் தேவாத்மானந்தா ஷம்பலா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அனைவரும் தியானம் செய்து, உயர் தளங்களில் இருக்கும் மகத்துவம் வாய்ந்த ஆசான்களின் அருளையும், நல்லாசிகளையும் பெற்றனர்.

    தியானம் புரிபவர், பல்வேறு கிரியைகள், முத்திரைகள் வாயிலாக ஆன்மிகச் சாதனையை மேம்படுத்திக்கொள்ள உதவும் கிரியை நிகழ்ச்சி ஒன்று குரு பூர்ணிமாவுக்கு முந்தைய தினம் நடந்தது.

  • ஜூன் 30, 2024

    பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ் சார்பில் பெங்களூரு, சிக்ககுபியில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

    குருஜி தேவாத்மானந்தா ஷம்பலா அவர்களால் நிறுவப்பட்ட பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ் அமைப்பின் சார்பில் ஜூன் 30, 2024 அன்று பெங்களூரில் உள்ள சிக்ககுபியில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயுர்வேதம் குறித்தும், நோய்களைக் குணப்படுத்துவதிலும், வாழ்க்கை முறைகளை மேம்படுத்துவதிலும் ஆயுர்வேதம் எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த முகாமின் நோக்கமாகும்.

    பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜின் தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவப் பயிற்சியாளர்களின் உதவியுடன் அர்ப்பணிப்புள்ள மருத்துவர்கள் குழு, பல்வேறு வயது வரம்பு மற்றும் பொருளாதாரப் பின்னணியிலிருந்து பங்கேற்ற 44 நபர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை வழங்கியது. இதில் சிக்ககுப்பிக் கிராம மக்களும் கலந்து கொண்டனர். அனைத்து ஆலோசனைகளும் பாதுகாப்பான, சுகாதாரமான சூழலில் நடத்தப்பட்டன. மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்குத் தொடர்ந்து மருத்துவ உதவிகள் கிடைக்க வழிசெய்யும் பொருட்டு வருங்காலத்தில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சி, பாரம்பரிய மருத்துவ முறைகள் மறுமலர்ச்சி பெற ஒரு முக்கியமான படிக்கல்லாக அமைந்தது; பழமைமிக்க ஆயுர்வேத விஞ்ஞானத்தில் வேரூன்றிய ஆரோக்கியமான வருங்காலச் சமுதாயம் மலர வழிவகுத்தது.

  • ஜூன் 21, 2024

    சத்ஞான யோக சாதனை

    சர்வதேச யோகா தினத்தையொட்டி, பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) வளாகத்தில், எங்கள் தன்னார்வத் தொண்டர்கள் சத்ஞான யோக சாதனை (SYS) பயிற்சியளித்தனர், இதில் சுமார் 130 மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். குருதேவர் தேவாத்மானந்தா ஷம்பலா அவர்கள் கலந்துகொண்டு தியானப் பயிற்சியை நடத்தினார், மேலும் அவர், இதில் பங்கேற்றோர்க்கு ஆன்மிக வழிகாட்டுதலையும் வழங்கினார்.

  • ஜூன் 10 - 14, 2024

    சத்ஞான யோக சாதனை

    பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ், பெங்களூரு ஐஎஸ்ஐடிஇ (ISITE) வளாகத்தில் URSC, ISRO ஊழியர்களுக்குச் சத்ஞான யோக சாதனை (SYS) பயிற்சியளித்தது.

  • மார்ச் 08, 2024

    மகா சிவராத்திரி

    மகா சிவராத்திரி என்பது ஒருவரின் வாழ்வில் மட்டுமல்லாது உலகில் சூழ்ந்திருக்கும் அறியாமை இருளை அகற்ற வேண்டியதின் அவசியத்தை நினைவுகூரும் மிகவும் தனித்துவம் வாய்ந்த பெருவிழாவாகும். ஆன்மிகச் சாதகர்களுக்கு, குறிப்பாகத் தியான மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு இந்த மகத்துவம் மிக்க இரவானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில், தியானம் செய்யவும், ஆற்றல்களை அனுபவித்துணரவும், கர்ம வினைகளை அழிக்கவும், ஆன்மாவைத் தூய்மைப்படுத்தவும் இது ஒரு முக்கியமான கால நேரமாகும்.

    இந்த ஆண்டு, மகா சிவராத்திரி திருவிழா மார்ச் 8, 2024 அன்று கொண்டாடப்பட்டது. சிவபெருமானின் சக்தி வாய்ந்த கவச மந்திரமான சிவ ரக்ஷா ஸ்தோத்திரம் பின்னணியில் ஒலிக்க, மகா சிவராத்திரி நிகழ்ச்சி தொடங்கியது. எங்கள் குருதேவர், ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா அவர்களின் வழிகாட்டுதலின்படி, பஞ்சாக்ஷரி மந்திரம் உச்சரித்தல், சமாதி நிலையை அடைய உதவும் தியானம், வில்வார்ச்சனை போன்றவை இந்தப் புனிதமான இரவில், சத்சங்கத்தில் பங்கேற்ற அனைவராலும் பயிற்சி செய்யப்பட்டன.

    இதோடு நடத்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் தியானம் செய்தவர்களை இரவு முழுவதும் கண்விழிக்க வைத்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுத் தியானம் செய்தவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, எங்கள் குருதேவரிடமிருந்து நல்லாசிகளைப் பெற்றதோடு, 9 மார்ச் 2024, சனிக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணியளவில் மகா சிவராத்திரி நிகழ்ச்சி நிறைவடைந்தது.

  • செப்டம்பர் 20 - அக்டோபர் 1, 2023

    நான்கு புனித தல யாத்திரை (சார் தாம்)

    குருஜி ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா அவர்களின் தலைமையில், செப்டம்பர் மாதம், சுமார் 60 பேர் கொண்ட குழு, நான்கு புனித தல (சார் தாம்) யாத்திரையின் வாயிலாகப் பல்வேறு சக்தி வாய்ந்த தெய்வீக ஆற்றல் மையங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றனர். இந்த யாத்திரை, கர்ம வினைகளை அழிப்பதற்கென்றே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய புண்ணிய ஸ்தலங்களுடன், உத்தரகாசி, தாரி தேவி கோயில், ருத்திர பிரயாக், வியாச குகை, மற்றும் வசிஷ்ட குகை ஆகிய இடங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டனர்.

  • ஜூலை 3, 2023

    குரு பௌர்ணமி விழா

    குரு பௌர்ணமி அல்லது வியாச பௌர்ணமி விழாவானது, மெய்ஞானம் அடைந்த ஆசான்கள் அல்லது குருக்களுக்கு என்றே அர்ப்பணிக்கப்பட்ட பாரம்பரிய விழாவாகும். தங்கள் ஆன்மிகக் குருக்களுக்குத் தங்களது மரியாதையையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவிக்கும் இந்நாள், ஆன்மிகத் தேடலுள்ள ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் விஷேசமான நாளாகும். ஆடி மாதத்தில் நேரடியாகப் பரபிரம்ம லோகத்திலிருந்து தூய தெய்வீக ஆற்றல்களைப் பெறுவதால், இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டு, குரு பௌர்ணமி, ஜூலை 3 ஆம் தேதி, திங்கட்கிழமையன்று விவேகானந்தா தாமில் முழு உற்சாகத்துடனும், தூய மனதுடனும் கொண்டாடப்பட்டது. இந்நாள் மிகவும் புனிதமான முறையில் கொண்டாடப்பட்டது.

  • மே 20 - 22, 2023

    தபஸ் - நிலை 1 (குழு 2) | அகண்ட தியானம் (பகவான் கல்கி ஜெயந்தி)

    குருஜி ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா அவர்கள், மே 20 மற்றும் 21 ஆம் தேதியில் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சி முகாமில், சிறப்புத் தியான வகுப்புகளை நடத்தினார். மேலும், முந்தைய பயிற்சி முகாமில் கற்பிக்கப்பட்ட பயிற்சிகள், கிரியைகள், யோகாசனங்கள், சூரிய நமஸ்காரம், பூர்வ தியான கிரியைகள் மற்றும் பிற பயிற்சிகளையும் மதிப்பாய்வு செய்தார். மே 22 ஆம் தேதி, காலை 6:30 மணி முதல் மதியம 12:30 மணிவரை அகண்ட தியானம் நடைபெற்றது. அன்று பகவான் கல்கி ஜெயந்தி என்பதால் மிகவும் விஷேசமான நன்னாளாக அமைந்தது.

  • மே 18, 2023

    குருஜி கிருஷ்ணானந்தா ஜெயந்தி

    குருஜி கிருஷ்ணானந்தா ஜெயந்தியை முன்னிட்டு மே 18 ஆம் தேதி, விவேகானந்தா தாமில் காலை 11:30 மணி முதல் மதியம் 1:00 மணிவரை சிறப்புத் தியான நிகழ்ச்சி நடைபெற்றது. குருஜி ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா அவர்கள் ஆன்லைன் வகுப்பின் வாயிலாக ஆன்மிகச் சாதகர்களுடன் இணைந்து அனைவரையும் ஆசீர்வதித்தார்.