ரிஷிகள்
ரிஷி என்ற வார்த்தைக்கு, சமஸ்கிருதத்தில், ஒளி தருபவர் என்று பொருள். ரிஷிகள் உண்மையாகவே படைப்பின் உயர் தளங்களில் வசிக்கும் ஒளி வடிவானவர்கள் ஆவர். ரிஷிகள் நம்முன் மனித உருவில் தோன்றாமல் இருக்கலாம், ஆனால் ஆழ்ந்த அன்பு மற்றும் பக்தியோடு மனதளவில் ஒன்றிணைந்து அவர்களைத் தொடர்பு கொண்டோமேயானால், அவர்களின் ஆற்றலையும், இருப்பையும் நம்மால் உணர முடியும்.
ஒவ்வொரு ரிஷியின் ஆற்றலும், ஞானமும் மட்டுமல்ல, கற்பிக்கும் முறையும் தனித்துவமானது.
கலை, இலக்கியம், மருத்துவம், ஜோதிடம், விஞ்ஞானம் என எந்தத் துறையாயினும், மனிதக்குலத்தின் தேவை அறிந்து ரிஷிகள் தங்களது ஆழ்ந்த ஞானத்தை உலக நன்மைக்காக அருளியுள்ளனர். ஆனால், அவர்களது முக்கியக் கடமை, நமக்கு ஆன்மிக ஞானத்தை வழங்கி, நமது ஆதிமூலமும், உறைவிடமுமான இறைப் பேரொளியிடம் நம்மைத் திரும்ப அழைத்துச் செல்வதேயாகும்.
ரிஷிகள் உலக மாயையைக் கடந்த மெய்ஞானியர் ஆவர். அவர்கள் தெய்வீகத்தின் உன்னத எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள். அவர்கள் மனிதக்குலத்தின் மீது பொழியும் கருணை, பேரன்பு மற்றும் வழிகாட்டுதல் அளப்பற்கரியது. ஆகையாலே, ரிஷிகள் சனாதன தர்மத்தில் மிகவும் போற்றிப் புகழப்படுகின்றனர்.
ரிஷிகளின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் (ஆகஸ்ட்-செப்டம்பர்) வளர்பிறை பஞ்சமி திதியில் ‘ரிஷி பஞ்சமி’ கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் உபவாசம் இருந்து, ரிஷிகளைப் பிரார்த்திக்கலாம். இருப்பினும், உண்மையான பிரார்த்தனையானது அன்புடனும், பக்தியுடனும் அவர்களிடத்தில் முழுமையாகச் சரணாகதி அடைதலிலும், தன்மாற்றம் அடைவதற்காக நாம் மேற்கொள்ளும் உண்மையான முயற்சியிலும் உள்ளது.
ரிஷிகள் எப்பொழுதும் நம்மை இடையறாது வழிநடத்துகிறார்கள். தினமும் நாம் முறையாகத் தியானித்தால், ரிஷிகளின் வழிகாட்டலைப் பெறுவோம்.
ரிஷி என்ற வார்த்தைக்கு, சமஸ்கிருதத்தில், ஒளி தருபவர் என்று பொருள். ரிஷிகள் உண்மையாகவே படைப்பின் உயர் தளங்களில் வசிக்கும் ஒளி வடிவானவர்கள் ஆவர். ரிஷிகள் நம்முன் மனித உருவில் தோன்றாமல் இருக்கலாம், ஆனால் ஆழ்ந்த அன்பு மற்றும் பக்தியோடு மனதளவில் ஒன்றிணைந்து அவர்களைத் தொடர்பு கொண்டோமேயானால், அவர்களின் ஆற்றலையும், இருப்பையும் நம்மால் உணர முடியும்.
சப்தரிஷிகள்
சப்தரிஷிகள் இப்பிரபஞ்சத்தின் ஒளிவிளக்காகத் திகழ்பவர்கள். அடிப்படையில் அவர்கள் உண்மை, பேரானந்தம், அன்பு மற்றும் ஒளியின் தளமாகிய சத்ய லோகத்தில் வாழ்பவர்கள். தேவைக்கேற்ப அவர்கள் இப்பூமியில் பிறப்பெடுத்து மனிதகுலத்தை வழிநடத்துகிறார்கள். அவர்கள் ஆன்மிக படிநிலையின் முதன்மை உறுப்பினர்கள் ஆவர்.
அண்டத்தில் நம் பூவுலகைப் போன்று கோடிக்கணக்கான உலகங்கள் உள்ளன. ஆனால், அதில் சில லட்ச உலகங்களில் மட்டுமே உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்த உலகங்கள் ஒவ்வொன்றையும் நிர்வகிக்கச் சப்தரிஷிகள், மற்ற மகத்துவம் வாய்ந்த ரிஷிகளை நியமிக்கிறார்கள்.
சப்த ரிஷிகளின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில், ஒரு நட்சத்திர மண்டலத்திற்குச் 'சப்தரிஷிகள் மண்டலம்' (Ursa Major – Great Bear) என்று பெயரிடப் பெற்றுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு 1,44,000 ரிஷி சேவகர்கள் இருந்த நிலையில், தற்போது நமது பூமியில் 90,000க்கும் சிறிது அதிகமான ரிஷி சேவகர்களே உள்ளனர். ஒவ்வொரு ரிஷி சேவகரும் தற்போது நமது பூமியை நிர்வகிக்கும் அத்ரி மகரிஷியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறார்கள். அத்ரி மகரிஷி பலமுறை இப்புவியில் அவதரித்துள்ளார்.இவர் தற்போதைய மன்வந்தரத்தின் சப்தரிஷிகளில் ஒருவராவார். தற்போதைய மன்வந்தரத்தின் சப்தரிஷிகள் பிருகு, அத்ரி, அங்கிரசர், வசிஷ்டர், புலஸ்தியர், புலகர் மற்றும் க்ரது மகரிஷிகள் ஆவர். இவர்கள் அனைவரும் மானச புத்திரர்கள் (பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றியவர்கள்) ஆவர்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...