தர்மம்
◘நம் உண்மை இயல்புகளான பேரன்பிலும், தூயதன்மையிலும் நிலைத்திருத்தலே தர்மம்.
◘பேரொளியின் பாதையைத் தேர்வு செய்து, அதன்படி நடப்பதே தர்மம்.
◘அச்சமின்றி வாழ்வதே தர்மம்.
◘நம் மனசாட்சிக்குட்பட்டு நடப்பதே தர்மம்.
◘நம் மனசாட்சிக்கு எதிராக நாம் புரியும் அனைத்து செயல்களுமே அதர்மம் ஆகும்.
◘நம்முள் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நிகழும் மனப்போராட்டமே தர்மயுத்தம்.
◘தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நிகழும் நிகழ்வுகள், மாயையின் விளையாட்டு.
◘தர்மம் எப்பொழுதும் அதர்மத்தை வெற்றிகொள்ளும். இது பிரபஞ்ச விதியாகும்.
◘தர்மத்தை நாம் காத்தால், தர்மம் நம்மைக் காத்து நிற்கும்.
◘தர்மம் ஒருபொழுதும் தோல்வியுறுவதில்லை.
ஆன்மிகம்
◘ஆன்மிகம் என்பது ஆன்மாவை அறிந்துணரும் அறிவியலாகும்.
◘ஆன்மிகம் தர்மத்தைப் போதிக்கிறது.
◘ஆன்மிகம், தர்மத்தைப் பின்பற்றுவதற்கான உன்னத ஞானத்தையும், வலிமையையும் நல்குகிறது.
◘ஆன்மிகம் என்பது புலன் அனுபவங்களைக் கடந்து, நமது ஆன்மாவை அறிந்துணர்வதாகும்.
◘ஆன்மிகம், ஆத்ம ஞானத்தையும், அதற்கு அடுத்த நிலைகளையும் அடையப் பொருத்தமான பாதையை நமக்கு வகுத்துத் தருகிறது.
◘தன்னுள் உறையும் தெய்வீகத்தைக் கண்டறிய எடுக்கும் நேர்மையான முயற்சியே ஆன்மிகத்தின் அடித்தளமாகக் கருதப்படுகிறது.
◘ஆன்மிகத்தின் ஞானம் ரிஷிகளால் அருளப்பெற்றதாகும்.
◘ஆன்மிகம், அனைத்து மதங்களின் சாராம்சமாகும். எனவே, ஆன்மிகம் உலகளாவியதாகும்.
◘ஒரு ஆன்மிக அன்பர் வாழ்வையும், பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் நேர்தன்மையுடன் அணுகுபவராகத் திகழ்கிறார்.
ஆன்மிக சாதனை
◘ஆன்மிக சாதனை என்பது தன்னொழுக்கத்துடன் ஒரு இலக்கை அடைய விரும்பி மேற்கொள்ளும் பயிற்சியாகும்.
◘ஆன்மிக சாதனை என்பது எந்தவொரு ஆன்மிக பயிற்சியையும் அன்றாடம் தொடர்ந்து செய்வதாகும்.
◘ஆத்ம ஞானம் அடைவதே ஆன்மிக சாதனையின் முதல் குறிக்கோளாகும்.
◘ஆன்மிக சாதனையில் நமக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள இடைவெளி மறைகிறது.
◘ஆன்மிக சாதனை என்பது குருவின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாகும்.
◘ஆன்மிகசாதனை என்பது ஆன்மாவின் அழைப்பாகும். இதை எந்த வயதிலும் மேற்கொள்ளலாம்.
◘ஆன்மிகசாதனைக்கு நம்பிக்கை, பொறுமை மற்றும் ஏற்புடைமை மிகவும் இன்றியமையாதது ஆகும்.
◘ஆன்மிக சாதனை பொருள்சார்ந்த வாழ்க்கை மற்றும் ஆன்மிக வாழ்க்கை இரண்டையும் சமநிலையோடு அணுகத் தேவையான மனப் பக்குவத்தை அளிக்கிறது.
தீட்சை
◘தீட்சை என்பது குருவானவர் ஆன்மிக ஆற்றல்களை ஆன்மிக ஆர்வலருக்கு அருளுவதாகும்.
◘தீட்சையின் பொழுது ஆன்மா இறைப்பேரொளியுடன் மீண்டும் இணைகிறது.
◘குருவின் பேரருளால் தீட்சை வழங்கப்படுகிறது.
◘தீட்சை நமது உடல், மன இயக்கங்களைச் சீர்செய்து தூய்மைப்படுத்துவதோடு, ஆன்மிக சாதனையில் அதிக அளவிலான ஆற்றல்களை நாம் கிரகிக்க உதவுகிறது.
◘தீட்சை என்பது ஆன்மிக சாதனை மற்றும் குருவிடம் நம்முடைய அர்பணிப்பின் துவக்கமாகும்.
◘தீட்சை என்பது ஆன்மிக சாதனையில் ஒருவர் முன்னேறும்பொழுது தொடர்ந்து நடைபெறும் செயல்முறையாகும்.
◘ஆன்மிகத்தில் முன்னேற்றம் என்பது சாதகர்களுக்கு அளிக்கப்படும் உயர் நிலை தீட்சைகளின் மூலம் அறியப்படுகிறது. ஒவ்வொரு தீட்சையும் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...