ஆர்வமுள்ள ஆன்மிகச் சாதகர் ஒவ்வொருவரும், ஆன்மிக நாட்காட்டியைப் பின்பற்றுவது அவசியமாகும். இது, விசேஷ நாட்களில் நம் ஆன்மிகச் சாதனையை முன்கூட்டியே திட்டமிடவும், தியானம் செய்ய நம்மைத் தயார் செய்யவும் பெரிதும் உதவுகிறது.
ஒவ்வொருவரிடமும் தியானம் செய்யும் திறனுள்ளது. ஆனால், ஒவ்வொருவரும் உள்ளிருந்து எழும் அக ஊக்கத்துடன் செயலாற்ற வேண்டும். அக ஊக்கம், ஆத்ம ஞானம் பெறவேண்டுமென்ற இலக்கை நோக்கிச் செயல்பட, அதை அடைய, அறிந்துணர நம்மைத் தூண்டும் சக்தியாகும்.
— தேவாத்மானந்தா ஷம்பலா
ஆன்மிக வளர்ச்சியை உங்களது முதன்மையான குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள்.
— தேவாத்மானந்தா ஷம்பலா
விசேஷ நாட்களில் தியானம் செய்வதால் அதிகப் பலன்களைப் பெறுவதோடு நமது ஆன்மிகச் சாதனையின் செயல்திறனும் மேம்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நாம் அளப்பரிய விசேஷ ஆற்றல்களைப் பெறுகிறோம். இது, எளிதில் நம்மைத் தியான நிலைக்கு அழைத்துச் செல்கிறது, மேலும், நமது கர்ம வினைகளைப் பெருமளவில் அழிக்க உதவுகிறது.
சிறிதளவு முயற்சியோடு, இந்த விசேஷ நாட்களை நாம் சரியாகப் பயன்படுத்தி, உறுதியோடு தியானம் செய்தால் பெரியளவு ஆன்மிக முன்னேற்றத்தை அடையலாம். இத்தகைய நன்னாட்களில் குரு, ரிஷிகள், சித்தர்கள் போன்றோரின் உதவிகளை நிறையப் பெறலாம். இவர்களின் அருளாலும், விசேஷ ஆற்றல்களாலும் தடைகள் பலவற்றை எளிதில் கடந்து, நமது குறிக்கோளான தன்மாற்றம் மற்றும் ஆத்ம ஞானத்தை விரைவாக அடையலாம்.
எடுத்துக்காட்டாக ரதசப்தமி, மகா சிவராத்திரி, அட்சய திருதியை, குரு பௌர்ணமி, ரிஷி பஞ்சமி, நவராத்திரி, மகரிஷிகளின் ஜெயந்தி நாட்கள், கிரகண நாட்கள், ஆடி மற்றும் மார்கழி மாதம் போன்ற விசேஷ காலங்கள் ஒவ்வொன்றும் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும்.
விசேஷ நாட்களில் தியானம் செய்வதால் அதிகப் பலன்களைப் பெறுவதோடு நமது ஆன்மிகச் சாதனையின் செயல்திறனும் மேம்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நாம் அளப்பரிய விசேஷ ஆற்றல்களைப் பெறுகிறோம். இது, எளிதில் நம்மைத் தியான நிலைக்கு அழைத்துச் செல்கிறது, மேலும், நமது கர்ம வினைகளைப் பெருமளவில் அழிக்க உதவுகிறது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...