சூரிய நமஸ்காரம்
சூரியனே நம் வாழ்வின் ஆதாரமான பிராணனை நமக்கு அளிப்பவர். சூரிய நமஸ்காரம் என்பது இந்தப் பிராண சக்தியை நம் உடலில் அபரிமிதமாக உள்வாங்கவும், அதனை உட்கிரகிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு யோகப் பயிற்சி முறையாகும். இது நம் உடலை, பிராணனைக் கிரகிக்கும் சிறந்த கருவியாக மாற்றுகிறது. குருகுலங்களில், ஆரம்பத்தில் யோகாசனங்கள் மற்றும் சூரிய நமஸ்கார பயிற்சிகள் மட்டுமே கற்பிக்கப்பட்டன. ஏனெனில், ஆரோக்கியமான மனதிற்கு ஆரோக்கியமான உடலைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும்.
சூரிய நமஸ்காரம் 12 ஆசனங்களைக் கொண்டது. இது உடற்பயிற்சி என்பதைக் காட்டிலும், முழுக் கவனத்தோடு, முறையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தல், வெளியிடுதல் போன்ற பயிற்சிகள் அடங்கிய மிகவும் சக்திவாய்ந்த கிரியையாகும். இது ஸ்தூல மற்றும் நுண்ணிய நாடி அமைப்புகள் இரண்டையுமே புதுப்பிக்கிறது. உடல், உயிர் மற்றும் மனம் முழுவதையும் புத்துயிர் பெறச்செய்கிறது. சூரிய நமஸ்கார பயிற்சியைத் தினந்தோறும் முறையாகச் செய்து வந்தால், அனைத்து விதமான உடல்நலப் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். மேலும், இது நம் அன்றாடத் தியானப் பயிற்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
சூரிய நமஸ்காரம் 12 ஆசனங்களைக் கொண்டது. இது உடற்பயிற்சி என்பதைக் காட்டிலும், முழுக் கவனத்தோடு, முறையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தல், வெளியிடுதல் போன்ற பயிற்சிகள் அடங்கிய மிகவும் சக்திவாய்ந்த கிரியையாகும். இது ஸ்தூல மற்றும் நுண்ணிய நாடி அமைப்புகள் இரண்டையுமே புதுப்பிக்கிறது. உடல், உயிர் மற்றும் மனம் முழுவதையும் புத்துயிர் பெறச்செய்கிறது. சூரிய நமஸ்கார பயிற்சியைத் தினந்தோறும் முறையாகச் செய்து வந்தால், அனைத்து விதமான உடல்நலப் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். மேலும், இது நம் அன்றாடத் தியானப் பயிற்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
பயிற்சி
ஒரு நாளில் குறைந்தபட்சம் 13 சுற்றுகள் பயிற்சி செய்யலாம். வேண்டுமாயின், சுற்றுகளைப் படிப்படியாக அதிகரிக்கலாம். தினமும் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்பவர் அனைத்து நோய்களிலிருந்தும் விடுபடுவர் என்பது சித்தர்களின் கூற்று. ஒவ்வொரு சுற்றின் தொடக்கத்திலும் ‘ஓம்’ என்று உச்சரித்துப் பயிற்சி செய்தோமானால், அது நமக்குத் தேவையான ஆற்றல்களை நம்முள் ஊற்றெடுக்கச் செய்யும்.
யார்
✔ 8 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயிற்சி செய்யலாம்.
எங்கே
✔ வீட்டினுள் அல்லது திறந்தவெளியிலும் பயிற்சி செய்யலாம்.
எப்பொழுது
✔ ஒரு நாளின் எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம். முடிந்தளவு அதிகாலை நேரத்தில் பயிற்சி செய்வது நல்லது.
பலன்கள்
✔ சூரிய நமஸ்காரத்தைத் தினசரி முறையாகப் பயிற்சி செய்வதால், பின்வரும் நன்மைகளைப் பெறலாம்:
✔ மூட்டுகள், முதுகுத்தண்டு மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைச் சரிசெய்கிறது.
✔ ஆயுளை அதிகரிக்கிறது.
✔ தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.
✔ சுவாசம் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்கிறது.
✔ பிராணமய கோஷத்தை வலுப்படுத்துகிறது.
✔ உடலில் உள்ள சுரப்பிகளின் ஆற்றலை அதிகரிக்கிறது.
✔ சக்கரங்களின் செயலாக்கங்களை அதிகரிக்கிறது.
✔ இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.
✔ முகத்தில் பொலிவைத் தருகிறது, ஒளிப்பிரபை (aura) மேம்படுகிறது.
✔ மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
✔ படைப்பாற்றல் (creativity), பாகுபாடு மற்றும் அறிவுசார் திறன்களை அதிகரிக்கிறது.
✔ உடல் வலுப்பெறவும், நெகிழ்வுத்தன்மை (flexibility) கிட்டவும் உதவுகிறது.
✔ உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
பயிற்சி குறிப்புகள்
✔ சூரிய நமஸ்காரத்தை வயிறு காலியாக இருப்பின், ஒரு நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். இருப்பினும், அதிகாலை சூரிய உதயத்தின்பொழுது வெறும் வயிற்றில் பயிற்சி செய்வது சிறந்தது. இல்லையெனில், திட ஆகாரத்திற்கு 3 மணி நேரத்திற்குப் பிறகும், நீராகாரத்திற்கு அரை முதல் 1 மணி நேரத்திற்குப் பிறகும் பயிற்சி செய்யலாம்.
✔ சூரிய நமஸ்காரத்தை நண்பகல் 12 மணிவரை கிழக்கு நோக்கியும், மதியம் முதல் சூரிய அஸ்தமனம் வரை வடக்கு நோக்கியும் பயிற்சி செய்ய வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்கவும்.
✔ நாம் வீட்டினுள் அல்லது திறந்த வெளியிலும் பயிற்சி செய்யலாம். இரண்டிலும் ஒரே அளவு பிராண சக்தியே கிட்டுகிறது.
✔ பயிற்சி முடிந்ததும், வியர்வையைத் துணியால் துடைக்காமல் இருப்பது நல்லது; அதற்குப் பதிலாக அதைத் தானாகவே உலர விடுவது நல்லது.
✔ 15 நிமிட இடைவெளிக்குப் பிறகு தண்ணீர் பருகலாம்.
✔ பயிற்சி முடித்த பின் குளிப்பதாயின், 45 நிமிடங்கள் இடைவெளி விடுவது அவசியம்.
⚠️இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை, முதுகுத் தண்டு மற்றும் இரத்த அழுத்தம் முதலியவற்றில் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் பயிற்சியைத் தொடங்கும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் அவசியம்.கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சமீப காலத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் மருத்துவர் ஆலோசனையைப் பின்பற்றுவது நல்லது.
✔ சரியான முறையில் ஆசனங்களைக் கற்கவும், அதன் முழுப் பலன்களையும் பெறவும் ஒரு அனுபவம் வாய்ந்த யோகக்கலைப் பயிற்சியாளரிடம் சூரிய நமஸ்காரம் பயில்வது உகந்தது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...