காலம்
படைப்பில், காலம் என்பது கடவுளின் நித்திய அம்சமாகும்.
காலம், ‘காலச் சக்கரம்’ எனக் குறிப்பிடப்படுகிறது. காலச் சக்கரம் என்பது காலச் சுழற்சியைக் குறிக்கிறது.
பரபிரம்ம லோகத்தில் அல்லது பேரொளியின் தளத்தில் 'காலம்' என்றெதுவுமில்லை. பேரொளியிலிருந்து படைப்பு முதலில் வெளிப்பட்டபொழுது, அது வட்ட சுழற்சியும் (revolving), தற்சுழற்சியும் (whirling) கொண்ட விண் எனும் நுண் ஆற்றல் துகளின் (energy particle) வடிவத்தில் இருந்தது. ஒவ்வொரு விண் துகளும் தனித்துவமான முறையில், வெவ்வேறு வேகத்தில் வட்டமாகச் சுழலவும், தன்னைத் தானே சுற்றவும் செய்தன. விண் துகள்களின் வட்ட சுழற்சி மற்றும் தற்சுழற்சி வேகத்தில் உள்ள வேறுபாடுகள், 'காலம்' தோன்றக் காரணமானது.
இந்த ஆற்றல் துகள்கள் மற்ற ஆற்றல் துகள்களால் ஈர்க்கப்பட்டு அடர்ந்து, திரண்டு கோள்கள், துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களாக உருவாகின. இதன் விளைவாக, படைப்பில் உள்ள அனைத்தும் சுழலும் தன்மையைக் கொண்டுள்ளன. எனவே, காலம் சுழலும் தன்மையுடைய காலச் சக்கரம் ஆனது.
யுகங்கள்
காலத்தின் அலகு, சில மணித்துளிகள் முதல் நூறாயிரம் கோடி ஆண்டுகள் வரை இருக்கும்.
1 மன்வந்தரம் = 72 மகா யுகங்கள்
1 மகா யுகம் = 4 யுகங்கள்
சத்ய யுகம் = 20,000 ஆண்டுகள்
திரேதா யுகம் = 15,000 ஆண்டுகள்
துவாபர யுகம் = 10,000 ஆண்டுகள்
கலியுகம் = 5,000 ஆண்டுகள்
மாறுதல் காலம் = 1,840 ஆண்டுகள்
இப்போது நாம் ‘வைவஸ்வத மன்வந்தரம்’ என்ற ஏழாவது மன்வந்தரத்தில், 29வது மகாயுகத்தில் இருக்கிறோம்.
மாற்றம் மற்றும் பிரளயம்
மாறுதல் காலம் (Transition Period) என்பது கலி யுகத்தையும், சத்ய யுகத்தையும் இணைக்கும் பிரளய காலமாகும். சத்ய யுகம் பொற்காலம் அல்லது புது யுகம் என்று அழைக்கப்படுகிறது. 28வது மகா யுகத்தின் கலியுகம் மார்ச் 14, 1974ம் ஆண்டு முடிவடைந்தது.
பிரபஞ்சத்திலிருந்து வரும் பிரளய ஆற்றல்கள் நமது பூமி மீது பொழிந்து இந்த மகாயுக மாற்றத்தை எளிதாக்குகிறது.
பிரளயம் என்பது தன்மாற்றத்தின் செயல்முறையாகும். பிரளய ஆற்றல்களை நாம் சரியாகப் பயன்படுத்தினால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சேகரித்த கர்ம வினைகளைக் கூட இக்காலத்தில் அழிக்கலாம். நம்மைத் தூய்மைப்படுத்தவும், சீர்திருத்தவும் இக்காலகட்டத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன.
நமது விழிப்புணர்வில் மிகப் பெரிய மாற்றம் 2012ம் ஆண்டின் இறுதியில், நுட்பமான நிலையில் நடந்தது. வரும் ஆண்டுகளில் பிரளயம் உச்சத்தில் இருக்கும். வரவிருக்கும் ஆண்டுகள் உலகளாவிய மாற்றத்திற்கும், அதற்கு இணையாகத் தனிப்பட்ட மாற்றத்திற்குமானவை. அனைத்து துறைகளிலும், குறிப்பாக அரசியல் மற்றும் மருத்துவ அறிவியலில் மாற்றம் ஏற்படும்.
பிரளய காலம் முடிவடைந்தவுடன், சீர்திருத்தங்கள் பல நடைபெறும், தற்பொழுது உள்ளதை விடச் சிறந்த அமைப்புகள் வரும். ரிஷிகள் பிரளய செயல்முறைகளில் வல்லுநர்கள். இதைப் பல மன்வந்தரங்களாக அவர்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் நமக்குத் துணை நிற்கிறார்கள். சப்தரிஷிகள் நம்மை வழிநடத்தும் சிறப்புப் பங்கினை வகிக்கின்றனர்.
இருள் சூழ்ந்து இருப்பதாகத் தோன்றினாலும், நமது பூமி ஏற்கனவே 70℅ சத்ய யுகத்திற்குள் நுழைந்துவிட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மாற்றத்திற்காக அமைதியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ரிஷிகள், சித்தர்கள், யோகிகள் மற்றும் பல பேரொளியின் சேவகர்களின் முயற்சிக்கும், அர்ப்பணிப்புக்கும் நன்றி.
பிரளயம் என்பது தன்மாற்றத்தின் செயல்முறையாகும். பிரளய ஆற்றல்களை நாம் சரியாகப் பயன்படுத்தினால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சேகரித்த கர்ம வினைகளைக் கூட இக்காலத்தில் அழிக்கலாம். நம்மைத் தூய்மைப்படுத்தவும், சீர்திருத்தவும் இக்காலகட்டத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. இருள் சூழ்ந்து இருப்பதாகத் தோன்றினாலும், நமது பூமி ஏற்கனவே 70℅ சத்ய யுகத்திற்குள் நுழைந்துவிட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மாற்றத்திற்காக அமைதியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ரிஷிகள், சித்தர்கள், யோகிகள் மற்றும் பல பேரொளியின் சேவகர்களின் முயற்சிக்கும், அர்ப்பணிப்புக்கும் நன்றி.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...