ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா
ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா, மெய்ஞானம் அடைந்த ஆன்மிகக் குரு ஆவார். அவர் தற்போது ரிஷிகளின் இறைப்பணியில் ஈடுபட்டுள்ளார். ஆன்மிக தேடல் உள்ள உண்மையான சாதகர்களுக்கு ஆன்ம ஞானத்தையும், தியானம் மற்றும் நேர்மயமாக்குதல் நுட்பங்களையும் அளித்துச் சப்தரிஷிகள் மற்றும் சித்தர்களின் தெய்வீக பாதையில் வழிநடத்துகிறார்.
ஆரம்ப வாழ்க்கை
தேவாத்மானந்தா ஷம்பலா அவர்களின் 7வது வயதில், அவரது தாயார் பக்த மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் கொண்டிருந்த அசைக்க முடியாத பக்தியையும், அவர் எவ்வாறு அழிவில்லாத சிரஞ்சீவி நிலையை அடைந்து, பிரம்மரிஷியானார் என்பதையும் விவரித்தபொழுது, அவரது ஆன்மிகத் தேடல் துவங்கியது. மார்கண்டேயரைப் பற்றி அவரது தாயார் சொன்ன கதை, அவருள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பக்த மார்க்கண்டேயரைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையே, அவரது ஆன்மிகப் பயணத்தின் துவக்கமானது. தேவாத்மானந்தா ஷம்பலாவின் தாயார், அனைத்து ஆன்மிக நிகழ்வுகளிலும் அவரை ஈடுபடச் செய்து, அவருக்கு உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஆதாரமாகத் திகழ்ந்தார். நாளுக்கு நாள், கடவுளின் மீதும், ரிஷிகளின் மீதும் அவருக்கிருந்த பேரார்வம் அதிகரித்தது.
அவர் தகவல் தொழில்நுட்ப பணியும், மகிழ்ச்சியான குடும்பமும் பெற்று மன நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த போதிலும், தெய்வீகத்தை அறிந்துணர வேண்டும் எனும் அவரது ஆன்மிகத் தேடல், காலப்போக்கில் அதிகரித்தது.
சப்தரிஷிகள் மற்றும் சித்தர்களின் அழைப்பை ஏற்று 2014ம் ஆண்டுப் பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ் அமைப்பை ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா நிறுவினார். அவர் உயரிய தியான பயிற்சிகள், கிரியைகள், யோகாசனங்கள், நேர்மயமாக்கலுக்கான வழிமுறைகள் மற்றும் பல்வேறு ஆன்மிக நுட்பங்களைத் தன்னை நாடி வரும் அனைவரின் முழுமையான நல்வாழ்விற்காகவும், அவர்களைக் குணப்படுத்தவும் வழங்கி வருகிறார்.
முதல் தீட்சை
ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலாவின் 26வது வயதில், மகா சித்தரும், மெய் ஞானமடைந்த யோகியுமான வேதாத்திரி மகரிஷி, குண்டலினி யோக தீட்சை அளித்தார். வேதாத்திரி மகரிஷி அவருக்குச் சூக்ஷ்மமாக, கர்ம யோகத்தைக் கற்பித்தார். வேதாத்திரி மகரிஷியின் மகாசமாதிக்குப் பிறகு, மகாவதார் பாபாஜியின் ஆசிகளால், நவம்பர் 2007ம் ஆண்டு, மகத்துவம் மிக்கக் குருவும், சப்தரிஷிகளில் ஒருவருமான, குருஜி கிருஷ்ணானந்தாவின் வழிகாட்டுதலோடு தியான யோக தீட்சை பெற்றார்.குருஜி கிருஷ்ணானந்தாவின் வாயிலாகச் சப்தரிஷிகள், விஸ்வாமித்திர மகரிஷி, மகரிஷி அமரா மற்றும் பிற முக்கிய ரிஷிகளைப் பற்றி அறிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் உயரிய தீட்சை நிலைகள், சூக்ஷ்ம தளங்கள், இம்மண்ணுலகிற்கு அப்பாற்பட்ட, பிற பரிமாணங்களைப் பற்றியும் அறிந்து கொண்டார்.
ரிஷித்துவத்தின் முதல் நிலை
பிப்ரவரி 3, 2011 அன்று, குருஜி கிருஷ்ணானந்தாவும், ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலாவின் சூக்ஷ்ம குருவான மகரிஷி அமராவும் இணைந்து ரிஷித்துவத்தின் முதல் நிலை தீட்சையை அவருக்கு அளித்தனர். அன்று முதல் சூக்ஷ்ம உலகில், ரிஷிகளின் பணிபுரிவதற்கான அவரது பயணம் துவங்கியது.
குருஜி கிருஷ்ணானந்தாவின் மகா சமாதிக்குப் பிறகு, அவர் தனது தகவல் தொழில்நுட்பத் துறை பணியிலிருந்து விலகி, ரிஷிகள் மற்றும் ரிஷிகளின் பணிகளுக்காகத் தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அப்பொழுதிலிருந்து அவருக்குப் போகநாதர் சித்தர், பரத்வாஜ மகரிஷி மற்றும் வசிஷ்ட மகரிஷி ஆகியோர் சூக்ஷ்ம தளத்திலிருந்து பயிற்சியளித்து, வழிகாட்டி வருகின்றனர்.
பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்
சப்தரிஷிகள் மற்றும் சித்தர்களின் அழைப்பை ஏற்று 2014ம் ஆண்டுப் பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ் அமைப்பை ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா நிறுவினார். அவர் உயரிய தியான பயிற்சிகள், கிரியைகள், யோகாசனங்கள், நேர்மயமாக்கலுக்கான வழிமுறைகள் மற்றும் பல்வேறு ஆன்மிக நுட்பங்களைத் தன்னை நாடி வரும் அனைவரின் முழுமையான நல்வாழ்விற்காகவும், அவர்களைக் குணப்படுத்தவும் வழங்கி வருகிறார்.
தேவாத்மானந்தா ஷம்பலா அவர்கள், உண்மையான ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு, தீட்சையும், ஆன்மிக வழிகாட்டுதலையும் வழங்குகிறார். அவர், சாதகர்களின் ஆன்மிக வளர்ச்சி மற்றும் தன்மாற்றத்தை ஏதுவாக்க வாராந்திர வகுப்புகளையும், அவ்வப்பொழுது ஆன்மிகச் சத்சங்கங்களையும் நடத்தி வருகிறார்.
தேவாத்மானந்தா ஷம்பலா அவர்களின் போதனைகளும், நுட்ப முறைகளும் எளிமையாகத் தோன்றினாலும் மிகவும் சக்திவாய்ந்தவை; ஆழ்ந்த ஞானம் நிறைந்தவை. அவை, அனைத்து நிலையில் உள்ள மக்களும் தன்மாற்றம் அடையவும், நேர்மயமாகவும், தங்கள் ஆன்மிகத் தேடலில் உயரிய நிலையை அடையவும் உதவுகின்றன. அவரது போதனைகள் முக்கியமாக, ஆன்மிகச் சாதகர்கள் எவ்வித எதிர்பார்ப்பு மற்ற அன்பை வெளிப்படுத்தவும், வாழ்க்கையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளவும், பணிவுடன் ஐக்கியநிலையில் இருக்கவும், தன்மாற்றம் அடையவும், இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடையவும் உதவுகிறது.
அவரது இயல்பு | அவரது திட்டங்கள்
தேவாத்மானந்தா ஷம்பலாவைப் பின்பற்றுபவர்களும், அவரை அறிந்தவர்களும், அவரை ஒரு நல்ல நண்பராகவும், அன்பே உருவானவராகவும், கருணையுள்ளம் கொண்டவராகவும், பணிவுடையவராகவும் விவரிப்பார்கள். உலகின் எந்த மூலையிலிருந்தும், யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கக்கூடிய வாழ்க்கை முறையே ஆன்மிகம் என்பதை எடுத்துரைக்கும் தெய்வீகத்தின் திருவுருவம் அவராவார். அவரது இந்த வாக்கிற்கு, நம் கண்முன்னே ஒரு சாதாரணக் குடும்பஸ்தராக இருந்து மெய்ஞானமடைந்த அவரது வாழ்வே சான்றாகும்.
இவ்வகிலம் மற்றும் மனிதக்குலத்தின் நலனுக்காகவும், இவ்வகிலத்தின் விழிப்புணர்வில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வரவும், பகவான் கல்கி மற்றும் சப்தரிஷிகள் உருவாக்கி வழிநடத்தும் பல தெய்வீக திட்டங்களைத் தேவாத்மானந்தா ஷம்பலா நிர்வகித்துச் செயல்படுத்துகிறார். கிடைத்தற்கரிய, விஷேசமான ஆற்றல்களை உலகின் பல்வேறு பகுதிகளில் ஸ்தாபித்தல், சூக்ஷ்ம தளத்தில் பல பணிகளை மேற்கொள்ளுதல் என அவர் ஆற்றும் பல்வேறு மகத்தான பணிகள் அனைத்தும், அவர் தனது வாழ்க்கை இலட்சியமாக எண்ணும் ரிஷிகளின் பணிகளே ஆகும்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...