சித்தர்கள்
சித்தர்கள், முக்தி நிலையை அடைந்த பரிபூரண யோகிகள் ஆவர். மெய் ஞானத்தை அறிந்துணர்ந்து, அதையும் கடந்து பயணம் செய்யும் உயரிய மெய்ப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆவர். ஆன்மிக விஞ்ஞானிகளாகவும், ரசவாதிகளாகவும் திகழும் இவர்கள், ரிஷிகளைப் போன்று உயர் நிலையில் உள்ள விசேஷ பிரிவினர் ஆவர்.
யோகக் கலை, தாந்திரீகம், ஜோதிடம், ரசவாதம், தற்காப்புக் கலைகள், மருத்துவம், வர்மக்கலை போன்ற துறைகளில் சித்தர்கள் மனித குலத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
மொத்தம் 64 முக்கியச் சித்திகள் அல்லது சக்திகள் உள்ளன. அனைத்து சித்தர்களும் அஷ்டமா சித்திகளை (எட்டு முக்கியச் சித்திகள்) பெற்றவர்களாவர். சித்தர்கள் ஆற்றல் தளத்தில் பணியாற்றுகின்றனர். 64 சித்திகளையும் பெற்ற 18 மகா சித்தர்கள் உள்ளனர். மனித குலத்திற்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டுமே அவர்கள் தங்கள் சக்திகளைப் பயன்படுத்துகிறார்கள். சித்தர்கள் அனைவரும் சூக்ஷ்ம வடிவில், நமது ஆன்மிக முன்னேற்றத்திற்கு உதவ எப்பொழுதும் துணை நிற்கின்றனர்.
18 மகா சித்தர்கள்: நந்தி தேவர், அகஸ்தியர், பதஞ்சலி, திருமூலர், காளாங்கி நாதர், போகநாதர், கொங்கனவர், காகபுஜண்டர், கோரக்கர், புலிப்பானி, சட்டமுனி, கமலமுனி, ராம தேவர், இடைக்காடர், மச்சமுனி, கருவூரார், பாம்பாட்டி சித்தர் , குதம்பை சித்தர்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...