ஓம்
◘படைப்பு வெளிப்பட்டபொழுது முதலில் தோன்றிய ஓம்கார ஒலி, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் அதிர்கிறது.
◘இது படைப்பின் மூன்று அதிர்வு நிலைகளைக் குறிக்கிறது - படைத்தல் (அ - அகரம்), காத்தல் (உ - உகரம்) மற்றும் அழித்தல் (ம் - மகரம்).
◘ஓம் என்பது வாய் பேச இயலாதவர்களும் எளிதாக உச்சரிக்கும் தனித்தன்மை கொண்ட ஒரு ஒற்றைச் சொல்லாகும்.
◘புனிதமான ஓம்கார மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பதால் ஒருவர் மிக உயரிய தெய்வீக நிலைகளை அறிந்துணர முடியும்.
◘ஆழ்ந்த அமைதியில், ஓம்கார ஒலியை நம்முள்ளே கேட்க முடியும்.
ஆற்றல்கள்
◘ஆற்றல்கள் என்பது இறைப்பேரொளியின் மாறுபட்ட அதிர்வலைகளின் வெளிப்பாடாகும்.
◘ஆற்றல்கள், ஆதிமூலமான பேரொளியிலிருந்து வெளிப்படுவதால் பேரன்பு, பேரறிவு, மற்றும் தூய்மை நிறைந்ததாக விளங்குகிறது.
◘பேரொளியின் அதிர்வலைகள் ஏற்படுத்தும் எதிரொலியின் அடர்த்தியைப் பொறுத்து, ஆற்றல்கள் திடமாகவோ அல்லது நுட்பமாகவோ இருக்கலாம். ஆகையால், படைப்பில் உள்ள எந்தவொரு பொருளும், அணுக்கள் முதல் விண்மீன்கள் வரை, நுண்ணுயிரிகள் முதல் பேரண்டம் வரை நுட்பமான ஆற்றல் புலத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
◘வெவ்வேறு விதத்தில் மற்றும் விகிதத்தில் ஒன்றிணையும் ஆற்றல்கள், வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்டிருப்பதால் படைப்பில் பன்முகத்தன்மையைச் சேர்க்கின்றன, எனவே, ஆற்றல்கள் படைப்பில் மாயைக்குக் காரணமாகின்றன.
◘பருப்பொருட்களை உருவாக்கக்கூடிய ஆற்றல் களம் மண்ணுலகம் தோன்றுவதற்கும், நுட்ப ஆற்றல் களம் சூக்ஷ்ம உலகம் தோன்றுவதற்கும் காரணமாகிறது.
◘பஞ்ச பூதங்களான - ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றின் ஆற்றல்கள் குறிப்பிட்ட தெய்வீக விகிதத்தில் ஒன்றிணையும் பொழுது உயிர்கள் உருவாகின்றன.
◘ஆற்றல், உயிர்களின் மூலமும், வாழ்வாதாரமும் ஆகும்.
◘நமது ஸ்தூல உடல் மற்றும் நுண்ணுடலுக்குத் தேவையான ஆற்றல்களை நாம் உணவு, நீர், சூரியன்(பிராணன்) மற்றும் பிரபஞ்ச ஆற்றல்களின் மூலம் பெறுகிறோம்.
◘நாம் மிகவும் ஆழ்ந்து ஆன்மிகச் சாதனை செய்யும்பொழுது, நம்முள் தூய பிரபஞ்ச ஆற்றல்கள் அபரிமிதமாகப் பாய்ந்து, நமது உடலமைப்பைத் தூய்மைப்படுத்தி, நமது ஆன்மிக முன்னேற்றத்தை விரைவுபடுத்தும்.
பிராண சக்தி
◘பிராண சக்தி என்பது சூரியனிடமிருந்து நாம் பெறும் விசேஷமான,நுண்ஆற்றலாகும்.
◘உயிர் மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்குவது பிராணனே ஆகும்.
◘நாடிகள் எனப்படும் நுண்ணிய ஆற்றல் நாளங்கள் கொண்ட வழியமைப்பின் வழியாக இந்தப் பிராண சக்தியை, பிராணமய கோஷம் பெறுகிறது.
◘நமது உடலில் 72,000 நாடிகள் உள்ளன. இவை பிராண சக்தியின் நுழைவாயிலாகச் செயல்படுகின்றன.
◘நம் ஆற்றல் திறன், உயிர் சக்தி, ஆயுள் காலம் ஆகியவை நாம் சுவாசிக்கும் முறையுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எனவே, பிராணாயாமம் ஒரு இன்றியமையாத ஆன்மிகப் பயிற்சியாகக் கருதப்படுகிறது.
◘நம்மால் நம் பிராணனைக் கட்டுப்படுத்த முடியுமெனில், நம் வாழ்வையும், வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் கட்டுப்படுத்த முடியும்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...