சுதந்திரம்
◘ சுதந்திரம் என்பது ஆன்மாவின் அடிப்படை வெளிப்பாடாகும்.
◘ஆன்மாவானது உடல், மன இயக்கத்தை ஆளும்போது சுதந்திரம் பிறக்கிறது.
◘நாம் மனசாட்சியைப் பின்பற்றும்போது சுதந்திரம் சாத்தியமாகிறது.
◘சுதந்திரம் என்பது பயம், கவலை மற்றும் கர்ம வினைகளின் தாக்கங்கள் இல்லாத நிலையாகும்.
◘சுதந்திரம் என்பது நம் அனைத்து தேவையற்ற பழக்கவழக்கங்களையும் பந்தங்களையும் வேரறுப்பதாகும்.
◘ஒருவரின் சுதந்திரத்தில், மற்றொருவர் தலையிட்டால், கர்மவினைக்கு உட்படுவர்.
◘ஆன்மா தனது பயணத்தை முடித்த பின்னர் அடைகிற இறுதி சுதந்திரம், முக்தி அல்லது மோட்சம் என்று அழைக்கப்படுகிறது.
தன்னிச்சை
◘தன்னிச்சை என்பது ஆன்மா தன் சுய விருப்பத்திற்கேற்ப செயலாற்ற விழைவதாகும்.
◘ஆன்மா படைப்பின் பல்வேறு அனுபவங்களைப் பெற தன்னிச்சையானது உதவுகிறது.
◘ஆன்மாவின் பயணம் தன்னிச்சையாகச் செயல்படுவதன் மூலம் தனித்துவம் பெறுகிறது.
◘தன்னிச்சையுடன் தேர்ந்தெடுப்பவை ஒரு பொழுதும் விமர்சிக்கப்படுவதோ, திணிக்கப்படுவதோ இல்லை.
◘ஆன்மா தன்னிச்சையுடன் தேர்ந்தெடுப்பவை கர்மவினைகளுக்கு உட்படுவதில்லை, மாறாக, அவற்றால் ஏற்படும் பின் விளைவுகள் கர்மவினைகளுக்கு உட்பட்டவையாகும்.
சரணாகதி
◘சரணாகதி என்பது தன் அகங்காரத்தைச் சமர்ப்பித்தல் ஆகும்.
◘சரணாகதி, தெய்வ சங்கல்பத்திற்குத் தன்னை அர்ப்பணித்தல் ஆகும்.
◘சரணாகதி, வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளையும் தவிர்க்க முற்படாமல் ஏற்றுக்கொள்வதாகும்.
◘சரணாகதி, அன்பு மற்றும் நம்பிக்கையிலிருந்து பிறக்கிறது.
◘சரணாகதி என்பது முழு ஈடுபாட்டோடு செயலாற்றுவதாகும், செயலற்று இருப்பதல்ல.
◘பரிபூரணச் சரணாகதியில், நாம் கர்ம வினைகளுக்கு உட்படுவதில்லை.
◘சரணாகதியே இறைவனை விரைந்து அடையும் எளிய வழியாகும்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...