தியானம்
◘தியானம், மனதினை அமைதிப்படுத்தும் விஞ்ஞானச் செயல்முறையாகும். இது உடல், மனம் மற்றும் புத்தியை அமைதிப்படுத்துவதோடு ஆன்மாவின் உள்ளொளியை விழித்தெழச் செய்கிறது.
◘தியானத்தில் நாம் உருவத் தோற்றங்களைக் கடந்து செல்கிறோம்.
◘தியானம் அனைத்து தளைகளையும், தடைகளையும் தகர்த்தெரிந்து நம்மை விடுவிக்கிறது.
◘தியானம், உடல் அசைவற்று அமர்தல் (body stillness) மற்றும் சக்திவாய்ந்த முறையில் மனதை ஒருமுகப்படுத்துதலில் (concentration) இருந்து தொடங்குகிறது.
◘பேராற்றலின் தெய்வீக அதிர்வலைகளை அறிந்துணரும் பொழுது, நம் விழிப்புணர்வு விசாலமாகப் பரந்து விரிகிறது, நாம் ஐக்கியநிலையை அடைகிறோம். பேரொளியை நேரடியாக அறிந்துணர்கிறோம்.
◘தியானம் கர்மவினைகளை அழிக்கிறது; வாழ்க்கை இலகுவாகவும், எளிதாகவும், உயரிய நோக்கம் உடையதாகவும்,பயனுள்ளதாகவும், அமைதியாகவும் மாறுகிறது.
◘தியானம் வாழ்வில் உற்சாகத்தை அளிக்கிறது. தனக்கும், சொந்தம், சமூகம் மற்றும் அகிலமனைத்திற்கும் நிறைவை அளிக்கிறது.
◘தியானம், நேர்மயமாதலுக்கான பாதையைத் தெளிவுபடுத்துகிறது.
◘தியானம் நமக்கு ஒரு புதிய வாழ்வியல் முறையை அளிக்கிறது.
◘நீண்ட காலத்திற்கு ஆற்றப்படும் ஆழ்ந்த தியானத்தைத் தவம் என்கிறோம்.
நேர்மயமாக்குதல்
◘எண்ணங்களின் ஆற்றலை உணர்ந்து, நமது எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நேர்மயமானதாக மாற்றுவதற்கு இந்த எண்ண ஆற்றலைப் பயன்படுத்தும் பொழுது நேர்மயமாக்குதல் துவங்குகிறது.
◘நம்முள்ளிருந்து அல்லது வெளியுலகிலிருந்து ஏதேனும் எதிர்மறை எண்ணம் அல்லது பலவீனம் மேலெழும்பொழுது உடனடியாக நேர்மயமான எண்ணங்களை எண்ணுவதின் மூலம் நேர்மயமாக்குதல் நடைபெறுகிறது.
◘நேர்மயமாக்குதல் என்பது உடல், மனம், புத்தி மற்றும் ஆன்மா என அனைத்து நிலைகளிலும், எந்த எதிர்மறையான தன்மைக்கும் இடமளிக்காது விழிப்புணர்வோடு இருத்தலாகும்.
◘நேர்மயமாக்குதல் என்பது நம் வாழ்விலும், வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும் நேர்மயமான அணுகுமுறையைக் கடைபிடிப்பதாகும்.
◘விழிப்புணர்வும், தன்மாற்றமடைய வேண்டும் என்ற உண்மையான நோக்கமும் நேர்மயமாக்குதலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
◘நேர்த்தன்மை உடைய மனம் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கும், மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும்.
◘நேர்த்தன்மை உடைய மனம் என்பது தூய்மையான மற்றும் வலிமையான மனமாகும். அத்தகைய மனதை எந்தச் சூழ்நிலையிலும் தவறாக வழிநடத்தவோ, பாதிக்கவோ முடியாது.
◘நேர்த்தன்மை உடையவராகாமல் நாம் உண்மையான சுதந்திரத்தையும், உண்மையான மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியாது.
◘நேர்மயமாக்குதல் மூலமே நமது பலவீனங்கள் அனைத்தையும் வெல்வதற்கான ஆற்றல் நம்முள்ளேயே இருப்பதை உணர்ந்து கொள்வது சாத்தியமாகும்.
தன்மாற்றம்
◘முழுமையான மற்றும் நிரந்தர மாற்றத்தையே தன்மாற்றம் என்கிறோம்.
◘ஒருவர் தனது கர்மவினைப் பதிவுகளின் தாக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட மேற்கொள்ளும் தீவிர முயற்சியே தன்மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
◘தன்மாற்றம் என்பது தேவையற்ற அனைத்தையும் துறப்பதாகும்.
◘தன்மாற்றமடைந்தவர் ஒருபொழுதும் முந்தைய நிலைக்குத் திரும்புவதில்லை. ஆதலால், அவரிடத்தில் ஐயமும், அச்சமும் இருப்பதில்லை.
◘மனதில் மாற்றம் ஏற்படும்பொழுது, தன்மாற்றம் நிகழ்கிறது.
◘தன்மாற்றமடைந்தவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும், நம்பிக்கை அளிப்பவராகவும், வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் திகழ்கிறார்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...