ஆத்ம ஞானம்

◘ஆத்ம ஞானம் என்பது நாம் அழியாத ஆன்மா என்பதனையும், பேரொளியின் ஒரு துகள் என்பதனையும் உணர்ந்து கொள்வதாகும். ஆதலால், தன்னை உணர்தலும், இறைவனை உணர்தலும் ஒன்றேயாகும்.
◘ஆத்மஞானமே ஆன்மிக சாதனையின் முதன்மைக் குறிக்கோளும், மனித வாழ்க்கையின் இறுதி நோக்கமும் ஆகும்.
◘அனைத்து யோகங்களும், ஆத்ம ஞானத்தை அடைவதின் மூலம் இறைநிலையை உணர்தலில் முடிவுறுகிறது.
◘ஆத்மஞானி எந்தச் சூழ்நிலையிலும் தனது மன அமைதியையும், சமநிலையையும் இழப்பதில்லை.
◘ஆத்மஞானி இயல்பாகவே அன்பையும், அமைதியையும் வெளிப்படுத்துகிறார். ஆத்மஞானியிடமிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வலைகள் அவரை மட்டுமல்லாது, அவரைச் சுற்றியுள்ள மக்களிடமும் பரவுகின்றன.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...