தியானம்
தியானம், நமது மனம், உடல் மற்றும் புத்தியை அமைதிப்படுத்தும் அகப்பயிற்சியும், வழிமுறையுமாகும். இது உடல் அசைவற்று அமர்தல் (body stillness), மனதை ஒருமுகப்படுத்துதல் (concentration) மற்றும் காட்சிப்படுத்துதல் (visualisation) ஆகியவற்றை முறையாகப் பயிற்சி செய்வதின் விளைவாக அடையும் நிலையாகும். இது அஷ்டாங்க யோகத்தின் ஏழாவது அங்கமாகும்.
தியானம் கர்ம வினைகளை அழிக்கவும், தன்மாற்றம் அடையவும், ஆத்ம ஞானம் பெறவும் ரிஷிகளால் வழங்கப்பட்ட ஒரு தொன்மையான மற்றும் உன்னத ஆன்மிக அறிவியலாகும். இது நாம் சமநிலையான வாழ்க்கையை வாழ உதவுவதோடு, முக்தியை அடைய நம்மைத் தகுதியுடையவர்களாக ஆக்குகிறது.
நமக்குத் அவசியமற்ற வெளியுலக ஈர்ப்பைத் தவிர்த்து, நிகழ் காலத்தில், இக்கணத்தில் முழுமையாக வாழ தியானம் உதவுகிறது. தியானம் நம் விழிப்புணர்வை எண்ணங்கள் மற்றும் புலன்களுக்கு அப்பால் கொண்டு செல்கிறது.
தொடர்ந்து வாசிக்க ...நாம் தியானிக்கும்பொழுது, நமது விழிப்புணர்வை 'சிந்தனைகள்' நிறைந்த நிலையிலிருந்து ஆற்றலை 'உணர்தல்' மற்றும் 'அனுபவித்தல்' என்ற நிலைக்குக் கொண்டு செல்ல முயல்கிறோம். நாம் ஆற்றல்களை அறிந்துணரும் பொழுது, நமது அமைதி ஆழமடைகிறது, விழிப்புணர்வு விரிவடைகிறது, நாம் ஐக்கிய நிலையை (oneness) அடைகிறோம், பேரொளியை நேரடியாக அறிந்துணர்கிறோம்.
தியானம் நம் உடலில் எண்ணற்ற ஆன்மிக செயல்பாடுகளின் இயக்கத்தை தூண்டுவதின் மூலம் நமது முழு உடலமைப்பின் உயிரியக்கத்தைப் புதுப்பிக்கிறது. நமது உடல், பிரபஞ்ச ஆற்றல்களைக் கிரகிக்கத் தயாராகிறது/ தொடங்குகிறது. இது நமது தனிமனித வாழ்க்கை அனுபவத்தை வளப்படுத்துவதுடன், உயிரியல் மற்றும் ஆன்மிகம் இரண்டிலும் (both biological and spiritual) ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சிக்கும் உதவுகிறது.
நாம் தியானிக்கும்பொழுது வெளிப்படும் தெய்வீக அதிர்வலைகள் நம்மை நன்மாற்றமடையச் செய்வதோடு மட்டுமல்லாமல் நம் சொந்தம், சுற்றம், சமூகம், இவ்வுலகம் என அனைவரிடத்திலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தியானம் செய்வதனால் தெய்வீக ஆற்றல் நிரம்பும் ஆற்றல் களமாக மாறி தெய்வத்தன்மை உடையவராகிறோம். இது பேரொளியின் தன்மைகளை நம்முள் விழித்தெழச் செய்கிறது. நம் வாழ்வு மிகவும் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாறுகிறது.
தியானமும், நேர்மயமாக்குதலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இரண்டும் ஒன்றுக்கொன்று உதவியாகவும், உறுதுணையாகவும் இருக்கின்றன. முக்கியமாகக் கடினமான மற்றும் சோதனையான சூழ்நிலைகளில், நேர்மயமாக்குதலை கடைபிடிக்க தியானம் மன வலிமையையும், உறுதியையும் அளிக்கிறது. நேர்மயமாக்குதல் ஆழ்ந்து தியானிக்கவும், சமாதி நிலையை எளிதில் அறிந்துணரவும் உதவுகிறது. நேர்மயமாக்குதல் மற்றும் தியானத்தின் ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே நம்மில் உள்ள அரிஷத்வர்க்கங்களை களைய முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நேர்மயமாக்குதல் சத்வ குணத்தைத் தரும் அதே வேளையில், தியானமானது அனைத்து குணங்களையும் கடந்து இறுதி விடுதலை அல்லது முக்தியை அடைய நம்மைத் தகுதியடையச் செய்கிறது. எனவே, நேர்மயமாக்குதல் மற்றும் தியானம் ஆகிய இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, ஒருங்கே பயிற்சி செய்யப்பட வேண்டும். அவை நமது லௌகீக மற்றும் ஆன்மிக முன்னேற்றத்திற்கு முழுமையான மற்றும் சமமான பார்வையை வழங்கும் ஆன்மிக சாதனையின் இரு கண்கள் போன்றவை.
நாம் தியானிக்கும்பொழுது, நமது விழிப்புணர்வை 'சிந்தனைகள்' நிறைந்த நிலையிலிருந்து ஆற்றலை 'உணர்தல்' மற்றும் 'அனுபவித்தல்' என்ற நிலைக்குக் கொண்டு செல்ல முயல்கிறோம். நாம் ஆற்றல்களை அறிந்துணரும் பொழுது, நமது அமைதி ஆழமடைகிறது, விழிப்புணர்வு விரிவடைகிறது, நாம் ஐக்கிய நிலையை (oneness) அடைகிறோம், பேரொளியை நேரடியாக அறிந்துணர்கிறோம்.
உடலியல் ரீதியான நன்மைகள்
✔ தொடர்ந்து செவ்வனே செய்யப்படும் தியான பயிற்சி பின்வரும் நன்மைகளை அளிக்கிறது.
✔ சோர்வு, கவலை, கோபம் மற்றும் மன அழுத்தத்தை அகற்றுகிறது.
✔ ஒட்டுமொத்த உடல், மன ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது.
✔ மனதை அமைதிப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
✔ தெளிவான மனம், கூர்மையான புத்தி மற்றும் வலிமையான உடலை நல்குகிறது.
✔ படைப்பாற்றலையும், ஒருமுகப்படுத்துதலையும் அதிகரிக்கிறது.
✔ நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
✔ சுரப்பிகளின் செயல்பாடு மற்றும் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
✔ மூளை செல்களைப் புதுப்பித்து நமது நினைவாற்றலை அதிகரிக்கிறது.
✔ மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் அமைதியை நல்குகிறது.
✔ தியானத்தின் பொழுது எண்ணச் சிதறல்களைக் குறைக்கிறது.
ஆன்மிக நன்மைகள்
✔ தொடர்ந்து செவ்வனே செய்யும் தியான பயிற்சி பின்வரும் ஆன்மிக நன்மைகளை அளிக்கிறது.
✔ நம்முள் இருக்கும் கர்ம வினைகளையும், அரிஷட்வர்கங்களையும் களைய உதவுகிறது.
✔ நன்மாற்றம் அடைவதற்கும், நேர்மயமாவதற்கும் உதவுகிறது.
✔ வாழ்க்கையின் உயரிய நோக்கத்தை அடையத் தூண்டுகிறது.
✔ மன அமைதியை நல்குகிறது.
✔ அனைத்து நிலைகளிலும் தூய்மையை அளிக்கிறது.
✔ கவனத்தையும், விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது.
✔ வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளையும் மனவுறுதியுடனும், பக்குவத்துடனும் கையாள உதவுகிறது.
✔ சக்கரங்களை தூய்மைப்படுத்தி, செய்லபடச்செய்து பிரபஞ்ச ஆற்றல் களஞ்சியத்துடன் இணைக்கிறது.
✔ பிராணமய கோஷத்தை சீர்செய்து நாடிகளை வலுபெறச் செய்கிறது.
✔ உள்ளுணர்வு, தொலை நுண்ணுணர்வு, புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை உணரும் ஆற்றல் போன்ற திறன்கள் கிட்டச் செய்கிறது.
✔ பரம்பொருளையும், ரிஷிகளையும் நாம் மீண்டும் தொடர்புகொள்ள உதவுகிறது.
✔ ஆன்மிகத்தில் உன்னத அனுபவமான சமாதி நிலையை அடைய உதவுகிறது.
✔ மனித பிறவியின் உயர்ந்த நோக்கமான முக்தி நிலையை அடைய உதவுகிறது.
✔ லௌகீக மற்றும் ஆன்மிக வாழ்க்கை இரண்டையும் சமநிலையோடு வாழ உதவுகிறது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...