காயத்ரி மந்திரம்
ஓம் பூ⁴ர்பு⁴வ॑ஸ்ஸுவ॑꞉
தத்ஸ॑விது॒ர்வரே”ண்ய॒ம்
ப⁴ர்கோ³ தே³வஸ்ய॑ தீ⁴மஹி
தி⁴யோ॒ யோன॑꞉ ப்ரசோ॒த³யா”த்
இந்தச் சக்தி வாய்ந்த மந்திரம் விஸ்வாமித்ர மகரிஷியால் அருளப்பெற்றது. மகத்துவம் மிக்க மகரிஷியான அவருக்கு, ஒளிப்பேராற்றலான பரப்பிரம்மம், காயத்ரி தேவியாகக் காட்சியளித்து அருளியதாகும். உயர்ந்த ஆன்மிக நிலையை உணர மனிதகுலத்திற்கு அதனை அவர் பரிசாக அளித்தார். இந்த மந்திரத்தின் மூலம் நாம் காயத்ரி தேவியை எழுந்தருளச் செய்வதோடு, தேவியின் தூய ஆற்றல்களை நேரடியாகப் பெற முடியும்.
தொடக்கத்தில், காயத்ரி மந்திரம் மூன்று ஸ்லோகங்களைக் கொண்டதாக இருந்தது. முந்தைய மகா யுகங்களில் (ஒரு மகா யுகம் என்பது சத்ய, த்ரேதா, துவாபர மற்றும் கலியுகத்தின் ஒரு முழுச் சுழற்சியை உள்ளடக்கியதாகும்) மக்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாகத் திகழ்ந்தனர், எனவே, அவர்கள் மூன்று ஸ்லோகங்களையும் உச்சாடனம் செய்தனர். இருப்பினும், 22வது மகா யுகத்திலிருந்து மனிதகுலத்தின் கிரகிக்கும் ஆற்றல் குன்றியதால், இப்பொழுது நடைமுறையில் உள்ள ஒரே ஒரு ஸ்லோகத்தை மட்டும் உச்சாடனம் செய்யும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், இந்த ஒரு ஸ்லோகமே இன்றைய காலத்தில் மெய்ஞானம் அடையப் போதுமானது.
பூமி (பூர்), கோள்கள் (புவ:) மற்றும் விண்மீன் திரள்கள் (ஸுவ:) மிக அதிக வேகத்தில் சுழல்கின்றன, மேலும் அவை உருவாக்கும் ஒலி, ஓம் (அருவ கடவுள்) ஆகும். கோடி சூர்ய பிரகாசமாக (ஸவிதுர்) தன்னை வெளிப்படுத்தும் கடவுள் (தத்) வணக்கத்துக்குரியவர் (வரேண்யம்). ஆகவே, நாம் அனைவரும், அந்தக் கடவுளின் (தேவஸ்ய) ஒளியை (பர்கோ) தியானிப்போம் (தீமஹி). மேலும், ஓம் என்ற மந்திரத்தையும் உச்சரிப்போம். அவர் (யோ) நமது (ந:) புத்தியை (தியோ:) சரியான திசையில் (ப்ரசோதயாத்) வழிநடத்தட்டும்.
பொருள்
பூமி (பூர்), கோள்கள் (புவ:) மற்றும் விண்மீன் திரள்கள் (ஸுவ:) மிக அதிக வேகத்தில் சுழல்கின்றன, மேலும் அவை உருவாக்கும் ஒலி, ஓம் (அருவ கடவுள்) ஆகும். கோடி சூர்ய பிரகாசமாக (ஸவிதுர்) தன்னை வெளிப்படுத்தும் கடவுள் (தத்) வணக்கத்துக்குரியவர் (வரேண்யம்). ஆகவே, நாம் அனைவரும், அந்தக் கடவுளின் (தேவஸ்ய) ஒளியை (பர்கோ) தியானிப்போம் (தீமஹி). மேலும், ஓம் என்ற மந்திரத்தையும் உச்சரிப்போம். அவர் (யோ) நமது (ந:) புத்தியை (தியோ:) சரியான திசையில் (ப்ரசோதயாத்) வழிநடத்தட்டும்.
நம் ஆன்மா, நம்முள் உறையும் சூரியனும், ஜீவனின் இயக்கமும் ஆகும். ஆனால், நாம் அகங்காரம் என்று அழைக்கப்படும் மனதின் வலுவான எதிர்மறைத் தன்மையின் தாக்கம் காரணமாக, ஆன்மாவின் குரலைப் புறக்கணிக்கிறோம். சரியானவற்றைத் தேர்வு செய்வதும், ஆன்மாவின் வழிகாட்டலைச் சரியாக அறிந்து செயல்படுவதும் புத்தியின் விவேகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தப் புத்தி அல்லது விவேகம் ஆன்மாவிற்கும், மனதிற்கும் இடையே உள்ள விஞ்ஞானமய கோசத்திலிருந்து வருகிறது.
இந்த மந்திரம், புத்தியின் இந்த விவேக சக்தியை மேம்படுத்தவும், கூர்மைப்படுத்தவும் உதவுகிறது. இது நம்முள் உறையும் ஆன்ம சூரியனைப் பிரகாசிக்கச் செய்து, தெய்வீகத்தன்மையை ஒளிரச் செய்ய உதவுகிறது.
நோக்கம்
புத்தியை விவேக ஆற்றலால் பிரகாசிக்கச் செய்ய
யார்
7 வயதுக்கு மேற்பட்டவர்கள்
எங்கே
வீட்டினுள் அல்லது திறந்தவெளியிலும் பயிற்சி செய்யலாம்
எப்பொழுது
சூரிய உதயம், நண்பகல் மற்றும் சூரிய அஸ்தமனத்தின்போது
காலம்
21/51/108 முறை சூரிய உதயம், நண்பகல் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது (ஏதேனும் ஒரு வேளையில் அல்லது நாளின் மூன்று வேளைகளிலும்)
பயிற்சி குறிப்புகள்
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும்போது, மந்திரத்தின் முழு அர்த்தத்தையும் உள்வாங்கி, கவனத்துடன் தியானித்து உச்சரிக்க வேண்டும். இயந்திரத்தனமாக உச்சரிப்பதால் தகுந்த பலன் கிடைக்காது.
சரியான உச்சாடனம் மற்றும் தெளிவான பதத்தில் இதை உரக்கச் சொல்லலாம். இருப்பினும், மனதிற்குள் மௌனமாக உச்சாடனம் செய்வதால், ஆன்மிக சாதனைக்குத் தேவையான கவனத்தையும், சக்தியையும் தருகிறது.
பலன்கள்
காயத்ரி மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பதால் பின்வரும் உடல்நலம், மனநலம் மற்றும் ஆன்மிகப் பலன்களைப் பெறலாம்
ஆரோக்கியத்தை முழுமையாக மேம்படுத்த உதவுகிறது.
மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.
உடலிலிருந்தும், மனதிலிருந்தும் சோர்வு, அழுத்தம் (stress) மற்றும் வலியை நீக்க உதவுகிறது.
சுய வழிகாட்டுதலைப் பெற உதவுகிறது.
தன்னம்பிக்கையை மேம்படுத்த உதவுகிறது.
நேர்மறையான சிந்தனைகளை வளர்க்க உதவுகிறது.
பற்றின்மையை நம்முள் விதைக்கிறது.
நம் கடந்தகால வாழ்க்கையில் இழைத்த கொடிய கர்ம வினைப் பதிவுகளை அழிக்க உதவுகிறது.
விழிப்புணர்வை விரிவடையச் செய்து சிறந்த முறையில் தியானம் செய்ய உதவுகிறது.
உள்ளார்ந்த அல்லது ஆன்மாவின் நிலையிலிருந்து முடிவுகளை எடுக்க உதவுகிறது.
ஞானம் பெற உதவுகிறது.
உள்ளார்ந்த அல்லது ஆன்மாவின் நிலையிலிருந்து முடிவுகளை எடுக்க உதவுகிறது.
தர்மத்தின் பாதையிலும், நமது ஆன்மிக இலக்குகளிலும் உறுதியாக இருக்க உதவுகிறது. எப்பொழுதும் நேர்தன்மையுடன் இருக்க உதவுகிறது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...