காய ஸ்தைரியம்
‘காயம்’ என்றால் உடல், ‘ஸ்தைரியம்’ என்றால் சமஸ்கிருதத்தில், அசைவற்ற நிலை என்று பொருள். இது, உடல் அசைவற்று, ஸ்திரமாய் இருக்கச் செய்யப்படும் ஒரு பயிற்சியாகும்.
உடல், மனம், புத்தி ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை, ஆதலால், உடல் அசைவற்று இருக்கும்பொழுது, மனம் அமைதியடைகிறது, இல்லையெனில், அது அவ்வளவு எளிதாகச் சாத்தியமாவதில்லை. மேலும், இது புத்தியையும் அமைதிப்படுத்துகிறது. இவ்வாறு, உடல், மனம், புத்தி அனைத்திலும் நிலவும் அமைதி, பிரபஞ்ச அமைதியுடன் தொடர்பை எளிதாக்குகிறது.
அக அமைதி (உடல், மனம், புத்தி ஆகிய மூன்றும் அசைவற்று, ஸ்திரமாய்) இல்லையெனில், தியானத்தின் உயரிய, நுட்பமான செயல்முறை துவங்காது. இக்காரணத்தினால், பண்டைய காலத்துக் குருகுல முறையில், இப்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு முதலில் இப்பயிற்சி கற்பிக்கப்பட்டது.
உடல், மனம், புத்தி ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை, ஆதலால், உடல் அசைவற்று இருக்கும்பொழுது, மனம் அமைதியடைகிறது, இல்லையெனில், அது அவ்வளவு எளிதாகச் சாத்தியமாவதில்லை. மேலும், இது புத்தியையும் அமைதிப்படுத்துகிறது. இவ்வாறு, உடல், மனம், புத்தி அனைத்திலும் நிலவும் அமைதி, பிரபஞ்ச அமைதியுடன் தொடர்பை எளிதாக்குகிறது.
நோக்கம்
உடல், மனம், புத்தி ஆகியவற்றை அமைதிப்படுத்துதல்.
செயல்முறை
அமைதியாக, உங்களுக்கு ஏற்புடைய நிலையில் அமருங்கள்.
உடலைத் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.
உச்சி முதல் பாதம் வரை, உங்கள் உடல் முழுவதையும் கவனியுங்கள்.
உங்களைப் பூமியில் வேரூன்றிய மரமாகவும், உங்கள் உடலின் மேல்பாகத்தை அம்மரத்தின் தண்டாகவும், உங்கள் கைகளைக் கிளைகளாகவும், உங்கள் கால்களை வேர்களாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
உங்கள் உடல் தரையில் வேரூன்றி இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள், காற்று வீசினாலும், நமைச்சல், வலி போன்ற பிற இடையூறுகள் இருந்தாலும் நீங்கள் அசைவற்று அமர்வீர்கள் எனச் சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்.
யார்
13 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயிற்சி செய்யலாம்.
எங்கே
வீட்டினுள் பயிற்சி செய்யலாம்.
எப்பொழுது
தியானத்தின் முன் குறைந்தபட்சம் 7 நிமிடங்கள் அல்லது கூடுதலான நேரத்திற்கு, அல்லது ஒரு நாளின் எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம்.
காலம்
குறைந்தபட்சம் 7 நிமிடங்கள்
பலன்கள்
காய ஸ்தைரியத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்வதால்:
தியானத்தின் தரம் மேம்படுவதோடு, தியானம் செய்யும் நேரம் முழுவதும் அமைதியாய் இருக்க உதவுகிறது.
உடல், மனம், புத்தியுடன் ஐக்கியநிலையை ஏற்படுத்துகிறது.
நமது சூட்சும உடலைப் பலப்படுத்துகிறது.
படைப்பாற்றலை மேம்படுத்துகிறது.
வைராக்கியம் அல்லது பற்றின்மையை அதிகரிக்கிறது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...