
ஜோதி ஆராதனை

ஜோதி ஆராதனை என்பது பேரொளியைச் சுடர்விளக்காக வழிபடுவதாகும். இது வேத காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள வழக்கமாகும்.
நம் இஷ்ட தெய்வத்தை எழுந்தருளச் செய்ய ஒரு சிறிய சுடர் விளக்கை ஏற்றி வழிபட்டு, அதன் மூலசக்தியோடு ஒன்றிணைவதாகும்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி மிகவும் தூயதாகக் கருதப்படுகிறது. அக்னி, உட்கிரகிக்கும் சக்தியும் (power to consume), தன்மை மாற்றம் அடையச் செய்யும் சக்தியும் (power to transform) மற்றும் பரிமாற்றம் செய்யும் சக்தியும் (power to convey) கொண்டதாகும். இதில் அக்னியின் பரிமாற்றம் செய்யும் சக்தி (power to convey) இந்தப் பயிற்சியில் பயன்படுத்தப்படுகிறது.
நமது பிரார்த்தனைக்கு முன் மற்றும் ஆன்மிகச் சாதனை அல்லது சிறப்பு வழிபாட்டின் முன் இதைப் பயிற்சி செய்யலாம். பகலும், இரவும் ஒன்று சேரும் சந்தியா காலத்தில் பயிற்சி செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
தொடர்ந்து வாசிக்க ...விளக்கு என்பது எண்ணெய் நிரப்பி, பருத்தி திரியிட்டு ஜோதி சுடரை ஏற்றப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பாத்திரமாகும். பாரம்பரியமாக, வேத காலத்திலிருந்து களிமண், பித்தளை அல்லது வெள்ளி விளக்கை ஜோதி சுடர் ஏற்றப் பயன்படுத்துவர்.
உங்கள் தியான அல்லது பூஜை அறையில் அல்லது வீட்டினுள் ஒரு தனிப்பட்ட அமைதியான இடத்தில் எண்ணெய், திரியிட்டு அமைக்கப்பட்ட விளக்கை ஏற்றி வைக்கவும். உங்கள் ஆன்மிகக் குருநாதர் அல்லது இஷ்ட தெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு முன்னால், அல்லது நீங்கள் அன்போடு தொடர்பு கொள்ள நினைக்கும், உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் எந்தத் தெய்வீக சக்தியாயினும் அதன் திருவுருவப் படத்திற்கு முன் விளக்கை ஏற்றி வைக்கலாம்.
ஜோதி சுடரை ஏற்றியவுடன், உங்கள் இஷ்ட தெய்வம் அல்லது குருநாதரை நன்றியுணர்வோடு பிரார்த்தனை செய்து சில நிமிடங்கள் அமைதியாக அமரவும்.
சிறிது நேரத்தில், சுடர் விளக்கெரியும் உங்கள் அறை முழுவதும் தெய்வீக ஆற்றல்களால் நிரம்பி, அமைதி மற்றும் அழகு குடிகொண்டு, ஆன்மிகச் சாதனைக்கு ஏற்ற இடமாக மாறுவதை நீங்கள் உணர்வீர்கள்; இந்தச் சுடர் மூலம் நீங்கள் தனிப்பட்ட உணர்வு (individual consciousness) மற்றும் பிரபஞ்ச உணர்வு (Cosmic consciousness) இரண்டையும் உணர்வதோடு, அவை இரண்டையும் ஒன்றிணையச் செய்கிறீர்கள்.இவ்வாறு வழிபடும்பொழுது, நீங்கள் உங்கள் வாழ்வில் தெய்வீகத்தை வரவழைக்கவும், அதனுடன் ஒன்றிணையவும் தொடங்குவீர்கள்.
தெய்வீக இணைப்பை வலுப்படுத்த, இரவும், பகலும் தொடர்ந்து விளக்கேற்றி வைக்கலாம். இந்த நடைமுறை அகண்ட ஜோதி ஆராதனை என்று அழைக்கப்படுகிறது.
பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி மிகவும் தூயதாகக் கருதப்படுகிறது. அக்னி, உட்கிரகிக்கும் சக்தியும் (power to consume), தன்மை மாற்றம் அடையச் செய்யும் சக்தியும் (power to transform) மற்றும் பரிமாற்றம் செய்யும் சக்தியும் (power to convey) கொண்டதாகும். இதில் அக்னியின் பரிமாற்றம் செய்யும் சக்தி (power to convey) இந்தப் பயிற்சியில் பயன்படுத்தப்படுகிறது. அக்னி உருவத்திற்கும், உருவமற்ற நிலைக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறது. இது நம் ஆன்மாவை இறை சைதன்யத்துடன் (Divine Consciousness) இணைக்கிறது.
நோக்கம்
நம் இஷ்ட தெய்வத்தின் மூலசக்தியோடு ஒன்றிணையவும், நமது ஆன்மிகச் சாதனையில் முன்னேற உதவி பெறவும்.

யார்
யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.
எங்கே
வீட்டினுள் அல்லது எந்த வழிபாட்டுத் தலத்திலும் பயிற்சி செய்யலாம்.
எப்பொழுது
நமது பிரார்த்தனைக்கு முன் மற்றும் ஆன்மிகச் சாதனை அல்லது சிறப்பு வழிபாட்டின் முன் இதைப் பயிற்சி செய்யலாம். பகலும், இரவும் ஒன்று சேரும் சந்தியா காலத்தில் பயிற்சி செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
காலம்
குறைந்தபட்சம் 5 நிமிடங்கள்
பலன்கள்

தெய்வீகத்தை வழிபட்டு வரவழைக்கவும், அதனுடன் ஒன்றிணையவும் உதவுகிறது.
நாம் ஆன்மிகச் சாதனை செய்யும் இடத்தைத் தூய்மையாக்கவும், அமைதி மற்றும் தெய்வீக அதிர்வலைகளால் நிரம்பச் செய்யவும் உதவுகிறது.
உங்கள் குடும்பத்தில் அல்லது பணியிடத்தில் ஆன்மிக மற்றும் பொருள் வளத்தை அதிகரிக்க உதவுகிறது.
ஞானத்தைப் போல் அக்னியும் பகிர்வதால் குறைவதில்லை என்பதால், அக்னி, ஞானமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பயிற்சி நமக்கு உயர்ந்த ஞானத்தைத் தருவதோடு, நமது புத்தி மற்றும் பகுத்தறியும் ஆற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது.
இது வழிபடும் இடத்தைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...