ஓம்கார தியானம்
ஓம் என்பது ஒரு மந்திரம். மந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு முறை மற்றும் ஒரு குறிப்பிட்ட அதிர்வலையைக் கொண்ட ஒலியாகும். இந்த முழுப் படைப்பும், வெவ்வேறு அளவுகளில் அதிரும் ஆற்றலின் எதிரொலியே அன்றி வேறில்லை. அதிர்வு இருக்கும் இடத்தில், ஒலி நிச்சயமாக இருக்கும். எனவே, முழுப் படைப்பும் ஒரு வகையான ஒலி அல்லது ஒலிக் கலவைகளின் சங்கமமாகும்.
படைப்பு வெளிப்பட்டபொழுது முதலில் தோன்றிய ஓம்கார ஒலி பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் அதிர்கிறது. இது படைப்பின் மூன்று அதிர்வு நிலைகளைக் குறிக்கிறது - படைத்தல் (அ - அகரம்), காத்தல் (உ - உகரம்) மற்றும் அழித்தல் (ம் - மகரம்). எனவே, நாம் 'ஓம்' என உச்சரிக்கும்போது, அது புதிய ஆற்றலை உருவாக்க உதவுகிறது, ஏற்கனவே உள்ள இயற்கையான ஆற்றலைப் பாதுகாப்பதோடு, நமது உடலமைப்பில் உள்ள தேவையற்ற ஆற்றலை அழிக்க உதவுகிறது.
ஆழ்ந்த அமைதியில், ஓம்கார ஒலியை நம்முள்ளே கேட்க முடியும், எனவே, ஓம்காரத்தை அமைதியின் ஒலி என்றும் அழைக்கலாம். மேலும், ஓம் என்பது வாய் பேச இயலாதவர்களும் எளிதாக உச்சரிக்கும் தனித்தன்மை கொண்ட ஒரு ஒற்றைச் சொல்லாகும்.
படைப்பு வெளிப்பட்டபொழுது முதலில் தோன்றிய ஓம்கார ஒலி பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் அதிர்கிறது. இது படைப்பின் மூன்று அதிர்வு நிலைகளைக் குறிக்கிறது - படைத்தல் (அ - அகரம்), காத்தல் (உ - உகரம்) மற்றும் அழித்தல் (ம் - மகரம்). எனவே, நாம் 'ஓம்' என உச்சரிக்கும்போது, அது புதிய ஆற்றலை உருவாக்க உதவுகிறது, ஏற்கனவே உள்ள இயற்கையான ஆற்றலைப் பாதுகாப்பதோடு, நமது உடலமைப்பில் உள்ள தேவையற்ற ஆற்றலை அழிக்க உதவுகிறது. ஓம்காரம் என்பது மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகும்; அதுவே மெய்ஞானம் பெற உதவும் தனியொரு விஞ்ஞானமாகும்.
செயல்முறை
தூய்மையான இடத்தில் அமரவும்.
ஓம் என்ற மந்திரத்தை மனதில் மெதுவாக அல்லது சற்று உரக்க உச்சரிக்கவும்.
அதன் அதிர்வை உணர்ந்து, உடல் முழுவதும் பரவ அனுமதிக்கவும்.
நோக்கம்
இறைப்பேரொளியிலிருந்து நேரடியாகப் பெறும் தெய்வீக ஆற்றல்கள் நமது உடல், மனம், புத்தி முழுவதும் அலையலையாய் பாய்ந்து நிரம்பி, நம் உடலமைப்பை உடனடியாகத் தெய்வத்தன்மை அடையச் செய்தல்.
யார்
8 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயிற்சி செய்யலாம்.
எங்கே
வீட்டின் உட்புறத்தில் அல்லது திறந்த வெளியிலும் பயிற்சி செய்யலாம்.
எப்பொழுது
ஒரு நாளின் எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம். உபவாசத்தின் பொழுது நாம் பயிற்சி செய்தால், அது உடல் மற்றும் மனதின் ஆற்றலைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், நாள் முழுவதும் இறை ஆற்றலுடன் இணைந்திருக்க உதவுகிறது.
காலம்
10 முதல் 20 நிமிடங்கள்.
பலன்கள்
நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உடலின் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது
தைராய்டு தொடர்பான செயலிழப்புகள் உட்பட ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருப்பின், அவற்றைச் சரிசெய்ய உதவுகிறது.
இதயக் கோளாறுகளைக் குணப்படுத்த - நமது மனம் மற்றும் உடலிற்கு ஓய்வு அளித்து, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது
குரல் நாண்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகளுக்கு வலிமையைக் கொடுப்பதன் மூலம் நமது குரலை மேம்படுத்த உதவுகிறது.
நமது ஆன்மிக மற்றும் லௌகீக வாழ்வைச் சரிசமமாகக் கையாள உதவுகிறது.
ஓம்காரம், அபரிமிதமான அதிர்வுகளை உருவாக்குவதன் மூலம் சுற்றுப்புறம் முழுவதையும் இறையாற்றலால் நிரப்பி ஒரு பாதுகாப்புக் களத்தை உருவாக்கி, உச்சரிக்கும் மந்திரத்தின் சக்தியை அதிகரிக்கிறது. இவ்வாறு ஒரு மந்திரத்தைக் குழுவாக உச்சரிக்கும்பொழுது அதன் ஆற்றல் பன்மடங்கு பெருகி அபரிமிதமாக வெளிப்படுகிறது. அந்த இடம் ஒரு ஆற்றல் மையமாகவும், இறைநிலையை ஈர்க்கும் மையமாகவும் மாறுகிறது.
ஓம்கார தியானத்தைத் தொடர்ந்து முறையாகப் பயிற்சி செய்வதின் மூலம் எளிதாகச் சமாதி நிலையை அடைய உதவுகிறது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...