ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி

Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

வசிஷ்ட மகரிஷி, மிகவும் போற்றி வணங்கப்படும், ரிக் வேத காலத்தைச் சேர்ந்த மகரிஷியாவார். பிரம்மாவின் மானச புத்திரர்களில் (பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றிய புதல்வர்களில்) ஒருவராதலால், வசிஷ்ட மகரிஷி பிறப்பிலேயே பிரம்மரிஷியாவார். இவர் தசரத மன்னரின் குல குருவாகவும், ஸ்ரீ ராமரின் குருவாகவும் அறியப்படுகிறார். இவர், தற்போதைய மன்வந்தரத்தின் சப்தரிஷிகளில் ஒருவராவார். சப்தரிஷிகளின் குழுமத்தில் இவர் குலபதி வசிஷ்டர் என அழைக்கப்படுகிறார்.

அழியாப்புகழும், அளப்பரிய ஆற்றலும் கொண்டவராயினும் இவர் பணிவே உருவானவர். இவரது பணிகள் எப்பொழுதும் இரகசியமானவை. இவர் தனது சாதனைகளை ஒருபொழுதும் பறைசாற்றிக் கொள்வதில்லை. வசிஷ்ட மகரிஷியின் சீடராவதும், சீடராகத் தொடர்ந்து நிலைத்திருப்பதும் அவ்வளவு எளிதல்ல.

வசிஷ்ட மகரிஷி, சத்ய லோகத்தில் வசிக்கிறார். நமது பூமியில் இவரது இருப்பிடம், அபு மலையில் உள்ளது. இவர் சப்தரிஷி மண்டலத்தின் தலைமை ரிஷியாவார். இவர், விஷ்வாமித்ர மகரிஷி, அத்ரி மகரிஷி, மார்க்கண்டேய மகரிஷி மற்றும் சில ரிஷிகளுடன் இணைந்து, முக்கியச் சந்தர்ப்பங்களில் தெய்வீக யாகங்களை நடத்தும் முதன்மை ரிஷியாவார். வசிஷ்ட மகரிஷியும் அவரது துணைவியார் மாதா அருந்ததி தேவியும் ரிஷிகேஷுக்கு வெளியே அமைந்துள்ள கங்கைக் கரையில் உள்ள வசிஷ்ட குகையில், நூறு ஆண்டுகள் தவம் இயற்றி உள்ளார்கள்.

வசிஷ்ட மகரிஷி, மனிதகுலத்தை மீட்டெடுப்பதற்காகப் பல மன்வந்தரங்களாக அயராது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.இவரது படைப்பான, 'யோக வாசிஷ்டம்' வேதாந்தம் மற்றும் யோக நெறிகளை விளக்குகிறது. இது வசிஷ்டருக்கும், பகவான் ராமருக்கும் இடையிலான உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இது, வாழ்வின் தன்மை, மனித வாழ்வின் துன்பங்கள், வாழ்க்கையின் இயல்புகள், சுய விருப்பம், மனிதனின் படைப்புத் திறன் மற்றும் ஆன்மிக விடுதலை (முக்தி) பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.