மகாசித்தர் போகநாதர் | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

மகாசித்தர் போகநாதர்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

மகாசித்தர் போகர் அல்லது போகநாதர், கி.மு. 550ம் முதல் கி.மு. 300ம் வரை வாழ்ந்த சித்தராவார். போகர், மகத்துவம் மிக்க சித்தரான காலாங்கிநாதரின் வழிகாட்டுதலினால் மிகச் சிறந்த சித்த புருஷராக உருவானார்.

போகநாதர் சித்த மருத்துவத்தில் நிபுணராக விளங்கினார்; அவர், அகஸ்திய மகரிஷி மற்றும் பிற சித்தர்களுடன் கலந்தாலோசித்து, பல ஆயிரக்கணக்கான அரிய மூலிகைகளைப் பயன்படுத்தி நவ பாஷாணம் அல்லது ஒன்பது இரசாயனங்களைத் தயாரித்தார். இந்த நவபாஷாணத்தில் இருந்து, அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் மிக்க 'மருந்துக் கலவை’ ஒன்றை உருவாக்கி, அந்த மருந்து கலவையைக் கொண்டு, பழனியின் (தமிழகத்தில் உள்ள நகரம்) மூல தெய்வமான முருகப்பெருமானின் சிலையை உருவாக்கினார். பழனி முருகப்பெருமானின் சிலை, இந்த அதிஅற்புத குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அதாவது, இந்தசிலை மீது படும் எந்தவொரு பொருளும் அதன் குணப்படுத்தும் ஆற்றலை உட்கிரகித்துக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.

பழனியில் உள்ள முருகரின் திருவுருவிற்கு பொதுவாக பால், பஞ்சாமிர்தம் (புதிய மற்றும் உலர்ந்த பழங்கள், தேன், வெல்லம், நெய் மற்றும் பிற இயற்கைப் பொருட்களை மசித்து செய்யப்படும் இனிப்பான கலவை) போன்ற திரவங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யும்பொழுது சிலையிலிருந்து அதிஅற்புத குணப்படுத்தும் சக்திகளைப் பெறுவதால் அவை பிரசாதமாகிறது. இத்தகைய மகத்துவம் மிக்க பழனி முருகரின் சிலை இலட்சக்கணக்கான பக்தர்களால் தொடர்ந்து போற்றி வணங்கப்படுகிறது. மேலும், இது போகரின் ரசவாத திறமைக்குச் சான்றாக விளங்குகிறது.

கீழை நாடுகளில் பிரபலமான தியான வடிவமான ஜென் முறையை உலகிற்கு எடுத்துரைத்த லாவோ சூ, மகாசித்தர் போகநாதர்தான். போகநாதரின் சமாதி பழனி கோயிலுக்குள் உள்ளது. இப்போதும் கூட மகாசித்தர் போகநாதர் முருகப்பெருமானுக்கு ஆராதனை செய்துவிட்டு, அவரது சன்னதியில் பூக்கள் மற்றும் திருநீரை விட்டுவிட்டு தனது சமாதிக்குத் திரும்புவதாகக் கூறப்படுகிறது.

போகர் தனது 'சப்தகாண்டம்' எனும் நூலில் தனது சீடர் புலிப்பாணிக்கு பற்பல குணமளிக்கும் மருந்து கலவைகளின் ரகசியங்களையும் வழங்கியுள்ளார்.

கீழை நாடுகளில் பிரபலமான தியான வடிவமான ஜென் முறையை உலகிற்கு எடுத்துரைத்த லாவோ சூ, மகாசித்தர் போகநாதர்தான்.

போகநாதரின் சமாதி பழனி கோயிலுக்குள் உள்ளது. இப்போதும் கூட மகாசித்தர் போகநாதர் முருகப்பெருமானுக்கு ஆராதனை செய்துவிட்டு, அவரது சன்னதியில் பூக்கள் மற்றும் திருநீரை விட்டுவிட்டு தனது சமாதிக்குத் திரும்புவதாகக் கூறப்படுகிறது.

மகாவதார் பாபாஜி, புலிப்பாணி சித்தர் (வியாக்ரபாத மகரிஷி), கொங்கணர் சித்தர் ஆகியோர் போகர் மகரிஷியின் குறிப்பிடத்தக்கச் சீடர்கள் ஆவர்.