விஸ்வாமித்திர மகரிஷி|பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

விஸ்வாமித்திர மகரிஷி


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

விஸ்வாமித்திர மகரிஷி, ரிஷிகளுள் மிகவும் மதித்து வணங்கிப் போற்றப்படும் மகரிஷியாவார். அவரது பெயருக்கேற்ப அவர் பிரபஞ்சத்தின் நண்பராவார். தற்போதைய மன்வந்தரத்தில் அவர் சப்தரிஷிகளுள் ஒருவராக இல்லாதிருப்பினும், பல்வேறு முக்கிய விஷயங்களில் சப்தரிஷிகள் அனைவரும் அவருடன் கலந்தாலோசிக்கின்றனர். அவர் ‘பிரம்மரிஷி’ ஆவார். பிரம்மரிஷி பட்டம் என்பது எல்லையற்ற பிரம்மத்தை, மிக உயரிய மெய்ஞானமாகிய பிரம்மஞானத்தை அறிந்துணர்ந்த ரிஷிக்கு அளிக்கப்படும் பட்டமாகும்.

புராணங்களின்படி, விஸ்வாமித்திர மகரிஷி மிகவும் புனிதமான ரிக்வேத மந்திரமான - காயத்ரி மந்திரத்தை உருவாக்கி அதன் அர்த்தத்தை முழுமையாக அறிந்துணர்ந்து, அதை இவ்வுலகிற்கு அருளிய முதல் ரிஷி ஆவார். தன்னுடைய தன்னிகரற்ற தவத்தால் மட்டுமே பிரம்மரிஷி நிலைக்கு உயர்ந்த ஒரே ரிஷி, விஸ்வாமித்திர மகரிஷி ஆவார்.

முற்பிறவியில், அரச வாழ்வை அனுபவிக்க வேண்டி அன்னை ஆதி சக்தியை நோக்கி நெடுங்காலம் தவம் இயற்றியதின் பயனாக விஸ்வாமித்திர மகரிஷி அரச குடும்பத்தில், காதி மன்னருக்கு, இளவரசர் கெளசிகனாகப் பிறந்தார். ஆனால், அதே வாழ்வில் அவர் மிகப் பெரிய தவச் சீலராகவும் உருவெடுப்பார் எனும் வரத்தையும் தேவி அருளியிருந்தாள். இளவரசர் கௌசிகனாக, விஸ்வாமித்திர மகரிஷிக்கு க்ஷத்திரிய யுத்த நெறிகளின் பயிற்சி முறையாக அளிக்கப்பட்டது. ஆனால், அவரது வாழ்வின் இரண்டாம் பாகத்தில், தவசிரேஷ்டரான வசிஷ்டரைச் சந்திக்க நேர்ந்தது.

வசிஷ்ட மகரிஷியைச் சந்தித்த பிறகு, அவர் பிரம்மரிஷி நிலையை அடையும் பொருட்டு, க்ஷத்திரிய குணங்களை விடுத்து, தனது கர்ம வினைகள் முழுவதையும் அழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. விஸ்வாமித்திர மகரிஷி, பிரம்மதேவரை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். ஆனால், அவர் ஒரு மானச புத்திரர் அல்ல, மனித வயிற்றிலிருந்து பிறந்த மானிடர் என்பதால் பிரம்மரிஷி பட்டம் பெறத் தகுதியற்றவர் என்று அவருக்கு அந்தப் பட்டம் வழங்கப்படவில்லை. இருப்பினும் அவர் தனது முயற்சியைக் கைவிடாமல், மிகுந்த மன உறுதியோடு மேலும் தனது தவத்தைத் தீவிரப்படுத்தினார். அவரது தவத்திற்கு உற்ற காவலராக வசிஷ்ட மகரிஷியே துணை நின்றார், அதன் பயனாக விஸ்வாமித்திர மகரிஷி வெற்றிகரமாகத் தனது கர்ம வினைகள் அனைத்தையும் அழித்து, இறுதியில் மகரிஷி வசிஷ்டர் வாய்மொழியாகப் 'பிரம்மரிஷி' பட்டம் பெற்றார்.

பிரம்மரிஷி நிலையை அடைந்த பிறகு, விஸ்வாமித்திர மகரிஷியின் ஆற்றலும், திறனும் ஈடு இணையற்றதாக வளர்ந்தது. பிரபஞ்சத்தின் எந்தப் பகுதியையும் அவரால் அணுக முடிந்தது. மனிதகுலத்தின் மேன்மைக்காக அவர், பிரபஞ்சத்தின் ஆதி சக்தியான காயத்ரி தேவியின் பேராற்றல் அனைவருக்கும் கிட்டும் வண்ணம் வழிவகைச் செய்தார். விஸ்வாமித்திர மகரிஷி, ஐந்தாவது மற்றும் ஆறாவது மன்வந்தரத்தில் சப்தரிஷிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். திரேதாயுகத்தில், மகாவிஷ்ணு மனித உருவில் ஸ்ரீ ராமராக இவ்வுலகில் அவதரித்த பொழுது அவரின் மார்க்கதரிசியாக விளங்கினார். விஸ்வாமித்திர மகரிஷி அமரத்துவம் பெற்றவர். சிவபெருமான் அவருக்கென்று துருவ நட்சத்திர மண்டலத்தில் மிகவும் தனித்துவமான இடத்தை வழங்கியுள்ளார்.

பிரம்மரிஷி நிலையை அடைந்த பிறகு, விஸ்வாமித்திர மகரிஷியின் ஆற்றலும், திறனும் ஈடு இணையற்றதாக வளர்ந்தது. பிரபஞ்சத்தின் எந்தப் பகுதியையும் அவரால் அணுக முடிந்தது. மனிதகுலத்தின் மேன்மைக்காக அவர், பிரபஞ்சத்தின் ஆதி சக்தியான காயத்ரி தேவியின் பேராற்றல் அனைவருக்கும் கிட்டும் வண்ணம் வழிவகைச் செய்தார்.

விஸ்வாமித்திர மகரிஷி, ஐந்தாவது மற்றும் ஆறாவது மன்வந்தரத்தில் சப்தரிஷிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். திரேதாயுகத்தில், மகாவிஷ்ணு மனித உருவில் ஸ்ரீ ராமராக இவ்வுலகில் அவதரித்த பொழுது அவரின் மார்க்கதரிசியாக விளங்கினார். விஸ்வாமித்திர மகரிஷி அமரத்துவம் பெற்றவர். சிவபெருமான் அவருக்கென்று துருவ நட்சத்திர மண்டலத்தில் மிகவும் தனித்துவமான இடத்தை வழங்கியுள்ளார்.

விஸ்வாமித்திர மகரிஷி, அளப்பரிய பேராற்றல்களைப் பெற்றிருப்பினும் பணிவு, கருணை மற்றும் ஒப்பில்லா அருளுள்ளம் கொண்டவராகவே அறியப்படுகிறார்.