+91 90712 92315 | contact@brahmarishishermitage.org | Find Us
ஆழ்நிலை ஆன்மிகத்தின் அற்புதங்களை அறிந்துணர்வீர்!
பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்
Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis 
                    Divine Soul Guru
Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis 
                    Divine Soul Guru
மகாவதார் பாபாஜி | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

மகாவதார் பாபாஜி


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

மகாவதார் பாபாஜி மிகவும் ஆற்றல் மிக்க சிவகணங்களில் ஒருவராவார். ஒரு சமயம் இவருக்குச் சிவபெருமானுக்கு இணையான சிறப்பிடம் வழங்கப்பட்டதால் பூமிக்குச் சென்று தெய்வீக ஞானத்தை உலகிற்கு அருளும் பணி இவருக்கு வழங்கப்பட்டது. பாபாஜியாக இவ்வுலகில் அவதரித்தார். இவர் என்றும் சிரஞ்சீவியாக வாழ்பவர்.

மகாவதார் பாபாஜி, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆன்மிகத் தாகத்தோடு காத்திருக்கும் ஆன்மாக்களை வழிநடத்தி வரும் மகத்துவம் வாய்ந்த, பேராற்றல் மிக்க ஆசான் ஆவார்.

கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகளான பாபாஜியின் பெற்றோர், தமிழ்நாட்டில் உள்ள கடலூருக்குக் குடிபெயர்ந்தனர். அங்குத் தான் இவர் பிறந்து, வளர்ந்தார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் நாகராஜ் ஆகும். தாய் தந்தையர் இறைவனடி சேர்ந்ததும் இவர் தனிமையானார். ஒரு வழிப்போக்கனால் வலுக்கட்டாயமாக வட இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குப் பல இன்னல்களைச் சந்தித்தார். இமயமலையில் சிறிது காலம் அலைந்து திரிந்த பின், ஆன்மிகத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். இவர் சந்தித்த சில அகோரிகள் மற்றும் பிற ஆசான்களின் அறிவுரையை ஏற்று இவர் தனது பிறந்த ஊருக்குத் திரும்பினார். திரும்பும் வழியில், போகநாதரும் அவருடைய சீடர்களும் சீனாவிலிருந்து திரும்பி வருவதைக் கண்டார். போகநாதர் இந்த 14-15 வயது இளைஞனைக் கண்டதும், இவரைத் தனது சீடராக ஏற்றுக் கொள்ள முன்வந்தார். இவ்வாறு, பாபாஜி போகநாதரின் சக்திவாய்ந்த வழிகாட்டுதலைப் பெற்று, விரைவில் அவரது முதன்மை சீடர்களில் ஒருவரானார். முதல் நிலைப் பயிற்சி முடிந்ததும், போகநாதர் இவரை அகஸ்திய மகரிஷியிடம் அனுப்பினார்.

மகாவதார் பாபாஜி, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆன்மிகத் தாகத்தோடு காத்திருக்கும் ஆன்மாக்களை வழிநடத்தி வரும் மகத்துவம் வாய்ந்த, பேராற்றல் மிக்க ஆசான் ஆவார். பாபாஜி, 64 சித்திகளைக் கொண்ட ஒரு ஆற்றல் மிக்க ஆசான் ஆவார். இவர் சிவபெருமானே தான் என்றும் சிலர் கூறுகின்றனர். இவரது உருவம் பல படங்களில் சித்தரிக்கப்பட்டிருப்பது போல் நேரில் இல்லை. இவரது ஆன்ம ஒளிக்கோளம்(orb) பெரும்பாலும் பொன் நிறத்திலும் சில நேரங்களில் கதிர்ப்பெதிர் நீலப்பச்சை (Opaque Blue) நிறத்திலும் இருக்கும். மகாவதார் பாபாஜி பல ஆன்மிகக் குருக்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருவான ஸ்ரீ தோதாபுரியும் பாபாஜியால் வழிநடத்தப்பட்டவர் ஆவார். யாரேனும் ஒருவர் இவரிடம் சரண் புகுந்தால், அவர் மெய்ஞானம் அடையும் வரை ஒவ்வொரு பிறப்பிலும் அவரைக் கவனித்து, கண்காணித்து வழிநடத்துகிறார்.

இளம் பாபாஜி மேற்குத் தொடர்ச்சி மலையை அடைந்து, அங்கு அகஸ்திய மகரிஷியின் தாள் பணிந்து கடினமான யோகப் பயிற்சிகளையும், கிரியைகளையும் கற்றார். அகஸ்திய மகரிஷியின் தீவிரப் பயிற்சியை, அளப்பரிய மனவுறுதி உள்ளவர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும். பாபாஜி, அகஸ்திய மகரிஷி கற்பித்த அனைத்திலும் உயரிய நிலைகளை அடைந்து, அழிவற்றவராக (சிரஞ்சீவியாக) மாறினார். மகாவதார் பாபாஜி நினைத்த பொழுது தன் உடல் கரைந்து மறையவும், பின் வேண்டும் பொழுது உடலை உருவாக்கித் தோன்றும் ஆற்றல் கொண்டவர். இப்பொழுதும், தமிழ்நாட்டின் சதுரகிரிக்கு வருகை தந்து, அங்கு அகஸ்திய மகரிஷி தனக்குப் பாடம் கற்பித்த இடத்திலே தங்குகிறார்.

பாபாஜி, 64 சித்திகளைக் கொண்ட ஒரு ஆற்றல் மிக்க ஆசான் ஆவார். இவர் சிவபெருமானே தான் என்றும் சிலர் கூறுகின்றனர். இவரது உருவம் பல படங்களில் சித்தரிக்கப்பட்டிருப்பது போல் நேரில் இல்லை. இவரது ஆன்ம ஒளிக்கோளம்(orb) பெரும்பாலும் பொன் நிறத்திலும் சில நேரங்களில் கதிர்ப்பெதிர் நீலப்பச்சை (Opaque Blue) நிறத்திலும் இருக்கும். மகாவதார் பாபாஜி பல ஆன்மிகக் குருக்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருவான ஸ்ரீ தோதாபுரியும் பாபாஜியால் வழிநடத்தப்பட்டவர் ஆவார். யாரேனும் ஒருவர் இவரிடம் சரண் புகுந்தால், அவர் மெய்ஞானம் அடையும் வரை ஒவ்வொரு பிறப்பிலும் அவரைக் கவனித்து, கண்காணித்து வழிநடத்துகிறார்.

பாபாஜி கிரியா யோகாவில் பல நுட்பங்களை அறிந்திருந்தாலும், அவருடைய சிறப்பு என்னவென்றால், அவர் தனது சீடர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு நுட்பத்தை மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்.

மகாவதார் பாபாஜிக்கு ஒரு சகோதரி உள்ளார். அவர் பாபாஜியின் உடன்பிறவா சகோதரி என்றாலும், அவரைப் பாபாஜி தனது உடன் பிறந்த சகோதரியாகவே பாவிக்கிறார் . அவரும் ஆற்றல் மிக்க யோகி ஆவார். பாபாஜி எங்குச் சென்றாலும் அவரும் உடன் செல்கிறார். ஆதலால், பாபாஜியிடமிருந்து அழைப்பு வரும் பொழுதெல்லாம் அவரும் தனது உடலை ஒளியுடலாக மாற்றிக் கொண்டு பாபாஜியுடன் செல்கிறார். மேரு மலையில் உள்ள பல சாதுக்களுக்கு அவர் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறார். திபெத்தில் உள்ள ஓம்கார மலையில் இருக்கும் சாதுக்கள் மற்றும் தீவிர ஆன்மிகச் சாதகர்களை அவர் குணப்படுத்துகிறார்.

இதையொத்த காணொளிகள்


எங்களைப் பின்தொடரவும்.