அகஸ்திய மகரிஷி
அகஸ்திய மகரிஷி சிவபெருமானின் நேரடி சீடர்களில் ஒருவராவார். பண்டைய திபெத்தை சேர்ந்தவரான மகரிஷி, சித்தர்களில் முதன்மையானவராகப் போற்றப்படுகிறார். லலிதா சஹஸ்ரநாமத்தை, பகவான் மகாவிஷ்ணுவின் அம்சமான ஹயக்ரீவர், அகஸ்திய மகரிஷிக்கு உபதேசித்தபோது முதன்முதலில் இவ்வுலகும் அறிந்தது. அகஸ்திய மகரிஷி, பகவான் சூரிய நாராயணரைப் போற்றி இயற்றிய 'ஆதித்ய ஹ்ருதயம்' என்னும் துதி, இராவணனுக்கு எதிரான போருக்கு முன்பாக, ஸ்ரீ இராமருக்கு உபதேசிக்கப்பட்டது. அவர், அகத்தியம் என்னும் நூலின் மூலம் தமிழ் மொழிக்கான அடிப்படை இலக்கணத்தை முதன் முதலாக வகுத்தவராவார்.
பல்வேறு துறைகளில், அகஸ்திய மகரிஷி ஆற்றிய தொண்டு அளப்பரியது. அவர் யோக சாஸ்திரத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்; மருத்துவம் மற்றும் ஜோதிடம், குறிப்பாக நாடி சாஸ்திரம் ஆகிய துறைகள் வளம்பெற பெரும் பங்கு வகித்தவர். அவர் ரசவாத வித்தையில் வல்லவர். அகஸ்திய சம்ஹிதை என்பது முருகப்பெருமானுக்கும், அகஸ்திய மகரிஷிக்கும் இடையே நடந்த உரையாடலின் தொகுப்பாகும். பல புராணங்களிலும், இதிகாசங்களிலும் மகரிஷி இடம் பெற்றுள்ளார். அவருடைய மருத்துவத் தயாரிப்புகளில் ஒன்றான பூபதி குளிகை, இறந்தவர்களைக் கூட உயிர்த்தெழச் செய்யும் ஆற்றல் வாய்ந்ததாகும். காவிரி நதி பிறக்கக் காரணமான அவர், சமுத்திரத்தில் ஒளிந்திருந்த அசுரர்களைக் கைப்பற்ற முழுச் சமுத்திரத்தையும் குடித்ததாகக் கூறப்படுகிறது.
அகஸ்திய மகரிஷி, இன்றைய கேரளம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் பயிற்றுவிக்கப்படும் களரிப்பயிற்று எனும் தற்காப்பு கலையை உலகிற்கு எடுத்துரைத்த வல்லுநர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். இந்தியாவின் தென்பகுதிக்கு மகரிஷி ஆற்றிய தொண்டு அளப்பரியது. அகஸ்திய மகரிஷி, அருணாசல மலையில் அபரிமிதமான தெய்வீக ஆற்றல்களைச் சேகரித்து, ஸ்தாபித்து, அந்த இடத்தைச் சிவபெருமானின் இருப்பிடத்திற்கு நிகரான மிகவும் சக்திவாய்ந்த சிவதலமாக்கி உள்ளார்.
புராணங்கள் கூறுவதாவது: சிவசக்தி திருமண வைபவத்தின் பொழுது, சிவபெருமான் அகஸ்திய மகரிஷியைத் தென்னாட்டிற்குச் செல்லுமாறு பணித்தார். மகரிஷி 64 சித்திகளிலும் தேர்ச்சி பெற்றவராயினும், வடக்கிலிருந்து தெற்கு வரை, பல அற்புதங்களை நிகழ்த்திய வண்ணம் நடந்தே சென்றார். வழியில், இமயமலையைக் கண்டு பொறாமை கொண்டு அதற்குப் போட்டியாக மிக உயரமாக வளர்ந்து கொண்டிருந்த வானுயர்ந்த விந்திய மலையிடம், தான் தென்னாட்டிற்குச் சென்றுவிட்டு வடக்கே திரும்பி வரும்வரை வளராமல் இருக்க வேண்டும் என அவர் வேண்டினார். விந்திய மலையும் மகரிஷியின் தாள் வணங்கி அவர் வேண்டுகோளை ஏற்று வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு விந்திய மலைகள் இன்றளவும் கட்டுப்படுவதாக நம்பப்படுகிறது. அகஸ்திய மகரிஷியும் விந்திய மலையின் அளவிற்கு உயரமாக வளர்ந்து, தனது சக்தி வாய்ந்த தவ ஆற்றலால் மலையின் மேல் பகுதியைப் பெயர்த்து எடுத்து, தென்னிந்தியாவில் உள்ள திருவண்ணாமலையில் வைத்ததாகக் கூறப்படுகிறது.
அகஸ்திய மகரிஷி, இன்றைய கேரளம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் பயிற்றுவிக்கப்படும் களரிப்பயிற்று எனும் தற்காப்பு கலையை உலகிற்கு எடுத்துரைத்த வல்லுநர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். இந்தியாவின் தென்பகுதிக்கு மகரிஷி ஆற்றிய தொண்டு அளப்பரியது. அகஸ்திய மகரிஷி, அருணாசல மலையில் அபரிமிதமான தெய்வீக ஆற்றல்களைச் சேகரித்து, ஸ்தாபித்து, அந்த இடத்தைச் சிவபெருமானின் இருப்பிடத்திற்கு நிகரான மிகவும் சக்திவாய்ந்த சிவதலமாக்கி உள்ளார்.
அகஸ்திய மகரிஷி, மகாவதார் பாபாஜிக்கு சித்தர் கல்வியையும், கிரியா பயிற்சிகளையும் கற்பித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் திருமூலரின் குருக்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இத்தகைய மகத்துவங்கள் வாய்ந்த மகரிஷி, தோற்றத்தில் சிறியவராகத் தோன்றினாலும், அவர் ஆற்றிய தொண்டு வானளாவியதாகும்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...