மகரிஷி அமரா
மகரிஷி அமரா பணிவு மற்றும் கம்பீரத்தின் திருவுருவமாகத் திகழ்ந்தவர். அவர் பிரம்ம லோகத்திலிருந்து அவதரித்தவர், ஆதலால், மனித மனதைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவராயிருந்தார்.
மகரிஷி அமரா, பிப்ரவரி 1, 1919 அன்று அரச குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே, விஸ்வாமித்திர மகரிஷியின் நேரடிப் பயிற்சியின் கீழ் மூன்றே ஆண்டுகளில் ஆன்மிக சாதனையின் உயர் நிலைகளை அடைந்தார். அவரது 12ம் வயதில், ரிஷி சேவகராக நியமிக்கப்பட்டார். அன்று முதல், அவர் ரிஷிகளின் கீழ் அயராது பணியாற்றினார். 'அமரா' என்றால் 'நித்தியம்' என்று பொருள், அதே போல் அவரது உபதேசங்களும் என்றும் நிலைத்து நிற்பவையாகும். அமரா எவ்வித பகட்டுமின்றி மிக எளிமையாக வாழ்ந்தார்.
அமரா, ஸ்தூல மற்றும் சூக்ஷ்ம தளங்கள் இரண்டிலுமே இடைவிடாமல் பணியாற்றினார். இவ்வுலகில் அவர் பலருக்குத் தீட்சை அளித்தார், வாரந்தோறும் வகுப்புகளை நடத்தினார். ஆலயங்கள் மற்றும் ஆன்மிக சாதகரின் வீடுகளில் ஒளிப்பேராற்றலை சேகரித்து, ஸ்தாபித்தார் (anchored energies). வேத காலத்தில் ரிஷிகள் கற்பித்தவண்ணம், அவர் தியானத்தை ஒரு விஞ்ஞானமாக மக்களுக்குக் கற்பித்தார். அவரது வழிகாட்டுதலின் கீழ், பலர் முக்தி அடைந்தனர்.
அவர் அனைத்து விதமான விளம்பரங்களையும் தவிர்த்து தனது மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தனி முக்கியத்துவம் கொடுத்து வழிகாட்டினார். ஆன்மிகத்தை எளிமையான சொற்களில் மறுவரையறை செய்தார். அவர் ஒரு தெய்வீக அவதாரமாயினும், தன்னை 'ரிஷிகளின் பணியாளன்' என்றே தாழ்மையுடன் கூறிக்கொள்வார். முதலில் மனிதனாகக் கற்றுக்கொள் பிறகு தெய்வமாகலாம் என்று எப்பொழுதும் வலியுறுத்துவார். அமரா, எந்தவொரு அறிவியல் துறையிலும், அவர் காலத்திலிருந்த புகழ்பெற்ற விஞ்ஞானிகளைவிட அறிவியல் ஞானம் அதிகம் பெற்றவராகவே இருந்தார். அவர் அசாத்திய திறன்கள் பல பெற்றிருப்பினும், ரிஷிகளின் பணிகளுக்காக மட்டுமே அதனை உபயோகித்தார்.
மகரிஷி அமரா பணிவு மற்றும் கம்பீரத்தின் திருவுருவமாகத் திகழ்ந்தவர். அவர் பிரம்ம லோகத்திலிருந்து அவதரித்தவர், ஆதலால், மனித மனதைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவராயிருந்தார். சூக்ஷ்ம தளத்தில், தனக்குக் கொடுக்கப்பட்ட ஆன்மிகப் பணிகள் பிரபஞ்சத்தின் எந்த எல்லையில் இருந்தாலும் அவற்றைச் செவ்வனே நிறைவேற்றினார். அவரது சூக்ஷ்ம பயணங்கள் எண்ணற்றவை. மேலும், சூக்ஷ்ம தளத்தில் அவர் மேற்கொண்ட பணிகள் மிகப் பெரியவையாகவும், சாவல்கள் நிறைந்தவையாகவும் இருந்தன. அவரது பணிகளின் ஆழமும், அளவும் நம் கற்பனைக்குக் கூட எட்டாதவையாகும். அமரா, எந்தவொரு பரிமாணத்தையும், லோகத்தையும் சூக்ஷ்ம மாகச் சென்றடையும் திறன் பெற்றிருந்தார். அவர் மனிதர்களுடன் சகஜமாகப் பழகினார், கடவுள்களுடன் உரையாடினார், ஒரே நேரத்தில் பல பரிமாணங்களில் வாழ்ந்தார். அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட சிறிய பணிகளைக் கூட முழுச் சரணாகதியுடன் செய்துமுடித்தார்; ரிஷிகளின் வார்த்தையை வேதவாக்காகப் பின்பற்றினார்.
சூக்ஷ்ம தளத்தில், தனக்குக் கொடுக்கப்பட்ட ஆன்மிகப் பணிகள் பிரபஞ்சத்தின் எந்த எல்லையில் இருந்தாலும் அவற்றைச் செவ்வனே நிறைவேற்றினார். அவரது சூக்ஷ்ம பயணங்கள் எண்ணற்றவை. மேலும், சூக்ஷ்ம தளத்தில் அவர் மேற்கொண்ட பணிகள் மிகப் பெரியவையாகவும், சாவல்கள் நிறைந்தவையாகவும் இருந்தன. அவரது பணிகளின் ஆழமும், அளவும் நம் கற்பனைக்குக் கூட எட்டாதவையாகும். அமரா, எந்தவொரு பரிமாணத்தையும், லோகத்தையும் சூக்ஷ்ம மாகச் சென்றடையும் திறன் பெற்றிருந்தார். அவர் மனிதர்களுடன் சகஜமாகப் பழகினார், கடவுள்களுடன் உரையாடினார், ஒரே நேரத்தில் பல பரிமாணங்களில் வாழ்ந்தார். அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட சிறிய பணிகளைக் கூட முழுச் சரணாகதியுடன் செய்துமுடித்தார்; ரிஷிகளின் வார்த்தையை வேதவாக்காகப் பின்பற்றினார்.
பிரபஞ்சத்தின் வேறொரு பகுதியில் இருந்து வந்த அவசர அழைப்பிற்கிணங்க, முக்கிய ஆன்மிகப் பணியாற்ற, அமரா ஆகஸ்ட் 25, 1982 அன்று இம்மண்ணுலகை விட்டுப் பிரிந்தார். அவர் தன் கண்களை இறுதியாக மூடுவதற்கு முன்பாக ‘விஸ்வாமித்திரா’ என்று தனது குருவின் நாமத்தை உச்சரித்து விடைபெற்றார்.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...