குருஜி கிருஷ்ணானந்தா
குருஜி கிருஷ்ணானந்தா, களங்கமற்ற அன்பின் திருவுருவாவார். அவரது பேச்சிலும், தோற்றத்திலும் தெய்வீகத் தன்மை குடிகொண்டிருந்தது. ‘குருஜி’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவர், தன்னை நாடி வந்த அனைவருக்கும் ஒரு நல்ல தந்தையாக, தாயாக, நண்பராக, வழிகாட்டியாக விளங்கினார். குருஜி மே 18, 1939ம் ஆண்டில் தெய்வ பக்தியும், நல்லொழுக்கமும் உடைய பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார், அதன் பயனாக அவர் நற்குணம், நேர்மை மற்றும் கருணையுள்ளம் கொண்ட மனிதராக வளர்ந்தார்.
அவருக்கு இயல்பாகவே இசை, கலை, இலக்கியம் போன்றவற்றில் அதிக நாட்டம் இருந்தது. மற்றவரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் வாழும் மக்களின் வாழ்வியல் முறை அவருக்கு ஏற்புடையதாக இல்லை. அன்பும், ஒளியும் நிறைந்த ஓர் உன்னத உலகை உருவாக்க அவரது மனம் ஏங்கியது. குருஜி, சாதாரண மனிதரைப் போல இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சிறந்த உலகை உருவாக்க வேண்டும் என்ற அவரது உணர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒருவருக்காகக் காத்திருந்தார்.
தனது வாழ்வில் 38 ஆண்டுகளைக் கடந்த பிறகே அவர் தனது குருவான மகரிஷி அமராவை சந்தித்தார். அதன்பிறகு, அவரது வாழ்வு முற்றிலும் மாறியது. மகரிஷி அமரா குருஜியின் வாழ்வில் ரிஷிகள், தெய்வீக அவதாரங்கள், உயரிய பரிமாணங்கள் எனக் கேள்வியுற்றிராத மேலும் பல ஆன்மிக உண்மைகளை அறிமுகப்படுத்தினார். அவர் ஒரு ஆன்மிகப் பணிக்காக ஒளியின் சேவகர்களுக்கு அழைப்பு விடுத்தபொழுது, உடனடியாகக் குருஜி எந்தவித நிபந்தனையுமின்றி அப்பணிக்காகத் தன்னை அர்ப்பணித்தார்.
குருஜி கிருஷ்ணானந்தா, களங்கமற்ற அன்பின் திருவுருவாவார். அவரது பேச்சிலும், தோற்றத்திலும் தெய்வீகத் தன்மை குடிகொண்டிருந்தது. ‘குருஜி’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவர், தன்னை நாடி வந்த அனைவருக்கும் ஒரு நல்ல தந்தையாக, தாயாக, நண்பராக, வழிகாட்டியாக விளங்கினார். குருஜி நவம்பர் 23, 2012 அன்று மகாசமாதி அடைந்தார். குருஜி சூக்ஷ்ம உலகிலிருந்து, உளமார தன்னை நாடும் அனைவருக்கும் இன்றும் வழிகாட்டுகிறார். அவருடைய போதனைகள் மற்றும் அர்ப்பணிப்புள்ள சீடர்களின் மூலம் அவரது தெய்வீகப் பணி தொடர்கிறது.
குருஜி தனது அரசாங்க வேலையை விடுத்து 1981ம் ஆண்டில் ரிஷிகளின் பணியில் இணைந்தார். இருப்பினும், 1982ம் ஆண்டில் மகரிஷி அமராவின் மறைவிற்குப் பிறகு அவர் மீண்டும் தனிமையானார். கடுமையான சோதனைகளுக்கு மத்தியில், 1988ம் ஆண்டு முதல் அனைவருக்கும் தியானத்தைக் கற்பிக்கத் தொடங்கினார். அதே நேரத்தில், படிப்படியாக ரிஷிகளின் பணிகளைச் செவ்வனே செயல்படுத்தத் தொடங்கினார்.
குருஜி தனது சூக்ஷ்ம உலகின் பணிகளைப் பற்றி அதிகம் விவரித்ததில்லை. அவர் தனது எளிமையான தோற்றத்திற்குப் பின்னால் தனது மகத்துவத்தைச் சாதுரியமாக மறைத்தார். அவர் தன்னைப் பற்றிப் பேசுவதை விட மகரிஷி அமரா மற்றும் ரிஷிகளைப் பற்றியே அதிகம் பேசினார். அவர் சூக்ஷ்ம உலகின் பணிகள் மற்றும் உலகியல் பணிகளுக்காக இரவு பகல் அயராது உழைத்தார். அவர் பூமியில் இரண்டாவது ஷம்பலாவை நிறுவ வேண்டும் என்னும் கனவைச் சுமந்து கொண்டிருந்தார்.
குருஜி நவம்பர் 23, 2012 அன்று மகாசமாதி அடைந்தார். குருஜி சூக்ஷ்ம உலகிலிருந்து, உளமார தன்னை நாடும் அனைவருக்கும் இன்றும் வழிகாட்டுகிறார். அவருடைய போதனைகள் மற்றும் அர்ப்பணிப்புள்ள சீடர்களின் மூலம் அவரது தெய்வீகப் பணி தொடர்கிறது.
எங்களைப் பின்தொடரவும்.
பொன்மொழிகள் களஞ்சியம் ...