வேதாத்திரி மகரிஷி | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

வேதாத்திரி மகரிஷி


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

ஸ்ரீ வேதாத்திரி மகரிஷி, 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி, தமிழ்நாட்டில், சென்னையின் புறநகரில் அமைந்துள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில், ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார்.

குழந்தைப் பருவம் முதலே, கடவுள் யார்? வறுமைக்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையை அறிந்து கொள்வதில் அவருக்கு தீவிரமான ஆர்வம் இருந்தது. அவருடைய ஆன்மிகத் தேடல் அவரைப் பல குருநாதர்களிடம் அழைத்துச் சென்றது. அவர் இளம் வயதிலேயே தியானம் செய்யத் தொடங்கினார், அதன் பயனாக 35 வயதிலேயே அவர் ஆத்ம ஞானம் அடைந்தார்.

வேதாத்திரி மகரிஷி, ஆன்மிகத்தை,சித்தர்கள் போதித்தவாறு அறிவியல் பூர்வமாக மக்களுக்கு விளக்கினார், அதனால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கூட மதம் மற்றும் ஆன்மிகத்தின் சாரத்தை மிகவும் எளிமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் ஒரு நவயுக சித்தர் அல்லது 19வது சித்தர் எனப் பலரால் கருதப்பட்டார்.

தியானம் மற்றும் சுயபரிசோதனை இரண்டுமே தனிநபருக்கு தன்மாற்றத்தையும், அமைதியையும் அளிக்கக்கூடிய சிறந்த கருவிகள் என்று மகரிஷி வலியுறுத்தினார். "தனிமனித அமைதியின் மூலம் உலக அமைதி", என்ற குறிக்கோளையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார். மகரிஷி அனைவருக்கும் ஏற்ப, குறிப்பாக இல்லற வாழ்வில் உள்ள மக்களுக்கும் ஏற்ப ஆன்மிகப் பாதையை வகுத்தளித்தார். அதனாலே அனைவராலும் அவர் ‘பாமர மக்களின் தத்துவ ஞானி' என்று அழைக்கப்பட்டார்.

வேதாத்திரி மகரிஷி சித்தர் நந்திதேவரின் அம்சமாவார். தியானம் மற்றும் சுயபரிசோதனை இரண்டுமே தனிநபருக்கு தன்மாற்றத்தையும், அமைதியையும் அளிக்கக்கூடிய சிறந்த கருவிகள் என்று மகரிஷி வலியுறுத்தினார். "தனிமனித அமைதியின் மூலம் உலக அமைதி", என்ற குறிக்கோளையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார். மகரிஷி அனைவருக்கும் ஏற்ப, குறிப்பாக இல்லற வாழ்வில் உள்ள மக்களுக்கும் ஏற்ப ஆன்மிகப் பாதையை வகுத்தளித்தார். அதனாலே அனைவராலும் அவர் ‘பாமர மக்களின் தத்துவ ஞானி' என்று அழைக்கப்பட்டார்.

ஆன்மிகம், மனம், ஜீவ காந்தம், எளியமுறை உடல் பயிற்சிகள், உலக அமைதி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அவர் பற்பல நூல்களை எழுதியுள்ளார். அவர் ஒரு கவிஞராகவும், ஹோமியோபதி, சித்த மருத்துவம் ஆகியவற்றில் நிபுணராகவும் இருந்தார்.

மகரிஷிக்கு, இராமலிங்க அடிகளாரின் (வள்ளலார்) தரிசனம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் வள்ளலார் தனது சூக்கும வடிவில், வேதாத்திரி மகரிஷியுடன் 12 ஆண்டுகள் ஒன்றுகலந்து இருந்தார், இந்த காலகட்டத்தில் தான் குறிப்பாக மகரிஷி பல கவிதைகளை இயற்றினார், அவை இன்றும் மக்களால் புரிந்துகொள்ள கடினமானவையாகவே உள்ளன. இந்த படைப்புகள் அனைத்தும் வள்ளலார் மகரிஷிக்கு அளித்த பரிசாகும், மேலும், இதனால் மகரிஷியின் ஆயுட்காலமும் நீண்டது/அதிகரித்தது.

வேதாத்திரி மகரிஷி 2006 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி சமாதி அடைந்தார், வருங்கால மக்கள் புரிந்து கொள்ளவும், பின்பற்றவும் ஒரு பெரிய ஆன்மிக பொக்கிஷத்தையும், போதனைகளையும் விட்டுச் சென்றுள்ளார்.

வேதாத்திரி மகரிஷி சித்தர் நந்திதேவரின் அம்சமாவார்.